'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் த...
Pune: புத்தாண்டு பார்ட்டிக்கு காண்டம் கொடுத்து அழைப்பு; சர்ச்சையில் சிக்கிய புனே பப்
உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். மும்பை, புனேயில் புத்தாண்டைக் கொண்டாட ஒரு நாள் பார்ட்டிக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகமானோர் தங்களது கட்டிடத்தின் மாடியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பீர்பார்கள், பப்கள், ரெஸ்டாரண்ட்கள் புத்தாண்டை வரவேற்கப் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. சிறப்பு பார்ட்டிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளன.
புனேயைச் சேர்ந்த பப் ஒன்று புத்தாண்டைக் கொண்டாடச் சிறப்பு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. அவ்வாறு பார்ட்டிக்கு அழைப்பு கொடுக்கும் போது அதனுடன் சேர்த்து காண்டம் பாக்கெட்களையும் இலவசமாகக் கொடுத்து வருகிறது. அதுவும் இளைஞர்களுக்குக் காண்டம் பாக்கெட் கொடுத்து புத்தாண்டு பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹை ஸ்பிரிட் பப் என்ற பெயரில் புனேயில் செயல்படும் பப்தான் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து இந்த பப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புனே போலீஸ் கமிஷனரிடம் நகர இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் அக்ஷய் ஜெயின் மனுக்கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அக்ஷய் ஜெயின் கூறுகையில், ''நாங்கள் இரவு வாழ்க்கை, பப் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பப்களுக்கு இளைஞர்களைக் கவரும் மார்க்கெட்டிங் யுக்தி புனே மரபுகளுக்கு எதிரானது. எனவே பப்பிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.
இத்தகைய செயல்கள் இளைஞர்களுக்குத் தவறான செய்தியை அனுப்பும், தவறான புரிதலை வளர்க்கும் மற்றும் சமூகத்தில் பொருத்தமற்ற பழக்கங்களை ஊக்குவிக்கும்" என்று கூறினார்.
புகாரைத் தொடர்ந்து போலீஸார் பப் உரிமையாளரை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் காண்டம் விநியோகம் செய்வது ஒன்றும் குற்றம் கிடையாது என்றும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோன்று செய்ததாகத் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...