Modi: மோடிக்காக ரிஸ்க் எடுத்த ட்ரம்ப்; சீனா உடன் போட்டி - உலக முன்னேற்றத்துக்கு ...
Pushpa 3: ``அல்லு அர்ஜூன் அட்லி படம்; 'புஷ்பா-3' அப்டேட்; " - தயாரிப்பாளர் சொல்வதென்ன?
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது.
முதல் பாகம் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்று அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், தேவி ஶ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் கிடைத்தது. இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ரூ. 1500 கோடியைத் தாண்டியுள்ளது.

முதல் பாகம் அல்லு அர்ஜூன் செஞ்சந்தனக் கட்டை கடத்தலின் ராஜாவாக மாறி, ராஷ்மிகாவைத் திருமணம் செய்து பகத் பாசிலை எதிர்கொள்ளத் தயாராவதில் முடிந்தது.
இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜூன், மாநிலத்தின் முதலமைச்சரையே உருவாக்கும் கிங் மேக்கராக மாறி, பின் பெரும் அரசியல் புள்ளியின் மகன் மீது கை வைத்து பெரும் அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொண்டு அடுத்த ஆக்ஷனுக்குத் தயராவதாக மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு விதைகளைத் தூவிவிட்டபடி முடிந்திருக்கிறது.
Mythri Ravi :#AlluArjun is doing #Atlee's film, followed by #Trivikram's film. He will take two years to complete these two films. Meanwhile, #Sukumar is working on a film with #RamCharan. After all these, #Pushpa3 will come sometime in 2028. pic.twitter.com/bHb7oYb18e
— Gulte (@GulteOfficial) March 16, 2025
இந்நிலையில் 'புஷ்பா' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், "புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அல்லு அர்ஜூன் அட்லி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார். இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு புஷ்பா -3 படத்திற்காக வேலைகளை ஆரம்பிப்பார். 2028ம் ஆண்டு புஷ்பா -3 திரையரங்கிற்கு வரும்" என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
