Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
Rain Updates: 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்
கடந்த சில நாள்களாகவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது.
இன்று காலை 10 மணி வரை...
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை இருக்கும்.
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை...
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

ஆரஞ்சு அலர்ட்... மஞ்சள் அலர்ட்...
நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைபடி, இன்று...
தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 21, 2025
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 20, 2025