ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
Rakhi Sawant: மூன்றாம் திருமணம்; பாகிஸ்தான் நடிகரை திருமணம் செய்யும் ராக்கி சாவந்த்!
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை திருமணமானவர். பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற ராக்கி சாவந்த் இரண்டாவது முறையாக திருமணம் செய்த விவாகரத்து செய்தபோது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார். டெல்லியைச் சேர்ந்த அடில் கான் என்ற நபரை காதலித்து இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ராக்கி சாவந்த் முஸ்லிம் மதத்திற்குகூட மாறினார். அவர்கள் சில காலம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். அதன் பிறகு அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அடில் கான் மீது ராக்கி சாவந்த் மும்பை போலீஸில் திருட்டு புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சில நாட்கள் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட ரிதேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து சில நாட்கள் ரகசியமாக வைத்திருந்தார். தற்போது ராக்கி சாவந்த் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதுவும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். அவரை பாகிஸ்தானில் திருமணம் செய்து இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஸ்சுவிட்சர்லாந்தில் தேனிலவு நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக ராக்கி சாவந்த் அளித்த பேட்டியில், ''பாகிஸ்தானில் இருந்து என்னை திருமணம் செய்ய பலரும் விரும்புகின்றனர். பாகிஸ்தான் சென்றபோது தான் எனது முந்தைய இரு திருமணத்தின் மூலம் எவ்வளவு சித்ரவதையை அனுபவித்தேன் என்பதை தெரிந்து கொண்டேன். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வது குறித்து பரிசீலிப்பேன்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலரும் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் துபாய், அமெரிக்காவில் நன்றாக வாழ்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் எதையும் செய்துகொள்ளவில்லை. பாகிஸ்தான் மக்களை நான் மிகவும் விரும்புகிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்த தோதி கான் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறேன். அவர் நடிகராகவும், போலீஸ் அதிகாரியாகவும் இருக்கிறார். எங்களது திருமணம் பாகிஸ்தானில் நடைபெறும்.
இந்தியாவில் வரவேற்பு நடைபெறும். ஸ்விட்சர்லாந்து அல்லது நெதர்லாந்தில் தேனிலவை கொண்டாட இருக்கிறேன். துபாயில் செட்டிலாக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார். ராக்கி சாவந்த் மூன்றாவது முறையாக திருமணம் செய்ய முடிவு செய்திருப்பது பாலிவுட்டில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.