RETRO: `இனி காதல்... பரிசுத்த காதல்'- வெளியானது சூர்யா - கார்த்திக் சுப்புராஜின் 'சூர்யா 44' அப்டேட்
சூர்யாவின் 44வது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஒருபக்கம் 'சூர்யா 44' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் 'சூர்யா 45'க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் சூர்யாவின் 44 படத்தில் பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாரயணின் இசையில் 'love laughter war' காதலும், கோபமுமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. தற்போது 'RETRO' என பெயரிடப்பட்ட இதன் டைட்டில் டீஸர் வெளியாகியிருக்கிறது. டீசரில் அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப் பஞ்சாயத்து என ஆக்ஷன் மோடில் இருக்கும் கோபம், பகை எல்லாத்தையும் விட்டுவிட்டு காதல் மோடிற்கு ஆயத்தமாகிறார் சூர்யா. ஆனால், அவையெல்லாம் சூர்யாவை விட்டதா? என்ற கேள்வியுடன் இந்த டீஸர் வெளியாகியிருக்கிறது. காதல், ஆக்ஷன் மோடின் உச்சத்தில் சூர்யா ரெட்ரோ அவதாரம் எடுத்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.