செய்திகள் :

Rewind 2024: Manjummel Boys, Lucky Baskhar,... இந்த ஆண்டு தமிழில் கவனம் ஈர்த்த வேற்று மொழி படங்கள்

post image
2024 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.

இந்த ஆண்டில் கோலிவுட்டில் பல படங்கள் வெளியாகி வெற்றியடைந்திருந்தாலும் மற்ற மொழித் திரைப்படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடியிருந்தனர். அவ்வகையில் இந்த வருடம் தமிழகத்தில் அதிக கவனம் ஈர்த்த மற்ற மொழித் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

'மஞ்சும்மல் பாய்ஸ்'

மஞ்சும்மல் பாய்ஸ்

மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு' பாடலை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படத்திலிருந்த தமிழ் கனெக்ட்டும் இளையராஜா மற்றும் கமல்ஹாசனுக்கு ட்ரிபியூட் செய்யும் வகையிலிருந்த மேக்கிங்கும் இந்தப் படத்தைத் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக மாற்றியது. இதனால் தமிழகத்தின் இரண்டாம்கட்ட நகரங்களில் கூட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது.

பிரேமலு

கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லீன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் ரிலீஸான திரைப்படம் 'பிரேமலு'. மலையாளத்திலேயே பிற மொழி ரசிகர்களைக் கவர்ந்த இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்தது. 'பிரேமலு' படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த மமிதா பைஜூ இப்போது அ.வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் அடுத்த படத்திலும் நடித்திருக்கிறார்.

பிரேமலு

ஆவேஷம்

'ரோமஞ்சம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிய படம் `ஆவேஷம்'. இந்தப் படத்தில் ரங்காவாக பட்டையைக் கிளப்பி இருப்பார் பகத் பாசில். இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றன. அதிலும் குறிப்பாக இலுமினாட்டி பாடல் பலராலும் கொண்டாடப்பட்டது. படத்தின் பாடல் காட்சிகளும் பகத் பாசிலின் ரியாக்ஷன்களும் இன்ஸ்டாவில் ரீல்ஸ்களாக வைரலாக, தமிழக ரசிகர்களும் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்.

ஆடுஜீவிதம்

இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், பிரித்விராஜ் நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ என்கிற `The Goat Life'. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகள் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு திரையில் வெளியானது. அரபு நாட்டுக்குப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளைப் போன்று வாழ்ந்த துயரக் கதையை மையக் கருவாகக் கொண்ட இப்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு உலகத்தரத்தைச் சேர்த்திருந்தது.

ஆடுஜீவிதம்

கிஷ்கிந்தா காண்டம்

2024 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான சிறந்த த்ரில்லர் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் படம் `கிஷ்கிந்தா காண்டம்'. கோலிவுட், டோலிவுட் என அத்தனை இடங்களிலும் கவனம் பெற்றது. இயக்குநர் டின்ஜித் அயத்தன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பலருக்கும் ஃபேவரைட்டானதுக்கு முக்கிய காரணமே இப்படம் பின்பற்றிய புதிய வடிவிலான த்ரில்லர் ஃபார்முலாதான். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

கல்கி 2898 AD

நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD'. நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது இப்படத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. புராணக் கதையை நவீனத்தோடு கலந்து Fusion ஆகக் காட்டிய இந்தப் படத்தின் திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

லக்கி பாஸ்கர்

லக்கி பாஸ்கர்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில், ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் வெளியான திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. தீபாவளி பண்டிகையின்போது வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. `நாமும் வாழ்க்கையில் பாஸ்கராகி சாதிக்க வேண்டும்', 'நம் வாழ்க்கையிலும் ஆண்டனிபோல ஒரு வழிக்காட்டி வரவேண்டும்..' என்பது மாதிரியான மீம்ஸ்களும் அந்த சமயத்தில் இணையத்தை வட்டமடித்தன. அமரன், ப்ளடி பெக்கர் போன்ற நேரடி தமிழ்ப்படங்களுடன் வெளியான போதும் லக்கி பாஸ்கர் நல்ல கலெக்சனை அள்ளியது.

புஷ்பா- 2

கடந்த 2021 ஆம் ஆண்டு 'புஷ்பா- 1' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து 'புஷ்பா-2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பிருந்தே, இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

புஷ்பா 2

படம் ரிலீஸ் ஆனது முதல் தெலுங்கிற்கு நிகராக மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், தற்போது வரை சுமார் 1500 கோடிக்கு வசூல் வேட்டை செய்திருக்கிறது. அந்த வசூலில் தமிழக பாக்ஸ் ஆபிஸின் பங்கும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

லாபத்தா லேடீஸ்

ஆமிர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லாபத்தா லேடீஸ்’. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பாலின சமத்துவத்தைப் பேசும் இந்தத் திரைப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி-யிலும் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தின் 75-வது கொண்டாட்டத்தின்போது அங்கும் திரையிடப்பட்டது.

லாபத்தா லேடீஸ்

சுவாரஸ்யமான சினிமாக்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சினிமா ரசிகர்களுக்கு வெரைட்டியாக விருந்து வைக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது. மேற்குறிப்பிட்ட படங்களில் உங்களின் பேவ்ரைட் படங்களைக் கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மதுரை: ``வாழும் காலம் வரை இதைச் செய்வோம்.." - எம்ஜிஆருக்கு வண்ணக்கோலமிட்ட தீவிர ரசிகர்!

அரசியலைக் கடந்து எம்ஜிஆரை விரும்புகிறவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் ஆத்மார்த்தமாக எம்ஜிஆர் புகழை பாடிக்கொண்டே இருப்பார்கள், அப்படி ஒருவர்தான் ஜெயக்குமார்.!எம... மேலும் பார்க்க

''தங்கக்காசு அபிஷேகம்; கட்டிப்பிடிச்சு நடிக்கிறதுல விருப்பமில்ல'' - நல்லெண்ணெய் சித்ரா பர்சனல்ஸ்!

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள்... மேலும் பார்க்க

What to watch on Theatre and OTT: விடுதலை, Mufasa, Rifle, Marco, ED; இந்த வாரம் கொண்டாட்டம் தான்!

விடுதலை பாகம் 2 (தமிழ்)விடுதலை பாகம் - 2வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. முதல் பாகத்தில் குமரேசன் (சூரி), வாத... மேலும் பார்க்க

Squid Game: 'ஸ்குவிட் கேம் சீசன் 3' - அப்டேட் கொடுத்த நடிகர் லீ ஜங் ஜே

நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற, சர்வைவல் த்ரில்லர் தொடர், 'ஸ்குவிட் கேம்'.தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் தொடருக்கு, உலகம் முழுவதும்... மேலும் பார்க்க

'கோடீஸ்வரி' கெளசல்யா கார்த்திகாவை நினைவிருக்கிறதா... இப்போது எப்படி இருக்கிறார்?

கோடி ரூபாய் வென்ற, கெளசல்யா கார்த்திகா!தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட கேம்ஷோவில் ஒரு கோடி ரூபாய் வென்ற, கெளசல்யா கார்த்திகாவை யாராலும் மறக்க முடியாது. ஒரு கோடி ரூபாயை அவர் வென்றவுடன், கெளசல்யா... மேலும் பார்க்க

Meena: "கணவரின் இழப்பு; மகளின் எதிர்காலம்; இனி என் வாழ்க்கை..?" - நடிகை மீனா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்க... மேலும் பார்க்க