செய்திகள் :

Sachin 241* : `11 ஆஸ்திரேலியர்கள் vs ஒற்றை சச்சின்!' - கவர் ட்ரைவே இல்லாமல் ஆடிய க்ளாஸ் இன்னிங்ஸ்!

post image

பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மீண்டும் சொதப்பியிருக்கிறார். அதுவும் அவரது வழக்கமான பாணியில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு பேட்டை விட்டு அவுட் ஆகியிருக்கிறார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கோலியை விமர்சித்துக் கொண்டிருக்கிறது.

'நீங்கள் உங்களின் ஹீரோவான சச்சினின் அந்த 241* இன்னிங்ஸை ஒரு முறை பாருங்கள் கோலி. அதில்தான் உங்களுக்கான பாடம் இருக்கிறது.' என கவாஸ்கர் கூறியிருக்கிறார். கவாஸ்கர் மட்டுமில்லை கிரிக்கெட் ஆர்வலர்கள் அத்தனை பேருமே விராட் கோலில்கு சொல்லும் அறிவுரை இதுதான். இந்நிலையில், சச்சினின் அந்த 241* இன்னிங்ஸை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்ப்போம்.
Sachin

2003-04 இல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியிருந்தது. முதல் 3 போட்டிகளிலுமே சச்சின் மிக மோசமாக ஆடியிருந்தார். 5 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 82 ரன்களைத்தான் அடித்திருந்தார். ஒரு அரைசதம் கூட இல்லை. இரண்டு முறை டக் அவுட்டும் ஆகியிருந்தார். அதிலும் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்தான். கில்லிஸ்பையின் பந்தில் lbw ஆகியிருந்தார். தொடக்கத்திலிருந்தே அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை. கடைசியாக சிட்னி டெஸ்ட் மட்டுமே மிச்சமிருக்கிறது. சிட்னி டெஸ்ட்டுக்கு முன்பாக ஒரு ஓரமாக அமர்ந்து யோசிக்கிறார். அப்படி என்னதான் தவறு செய்கிறோம் என தனக்குள்ளாகவே கேள்விகளை எழுப்பிக் கொள்கிறார். தன்னுடைய அண்ணனான அஜித் டெண்டுல்கரை அழைக்கிறார். அவரிடம் ஆலோசனை கேட்கிறார்.

சச்சினின் முகத்தில் அறைந்ததை போன்ற உண்மைகளை அஜித் அவர் முன் எடுத்து வைக்கிறார். 'பௌலர்கள் உன் விக்கெட்டை வீழ்த்தவே இல்லை. நீதான் உன் விக்கெட்டை அவர்களுக்கு பரிசாக கொடுத்துவிட்டு வருகிறாய்.' என்கிறார். மேலும், 'உன்னுடைய டெக்னிக்கில் எந்த பிரச்சனையும் இல்லை. உன்னுடைய மனநிலையில்தான் பிரச்சனை இருக்கிறது. உன்னுடைய ஷாட் செலக்சனில் கவனம் செலுத்து. எந்த ஷாட்டில் அதிகம் அவுட் ஆகிறாய் என யோசி.' என்றும் கூறுகிறார். கூடவே சிட்னி டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நாட் அவுட் ஆக இருந்துவிட்டு வா! என ஒரு டாஸ்க்கையும் சச்சினுக்கு கொடுக்கிறார்.

சச்சினும் அண்ணனின் அறிவீர்கள் ஏற்று தன்னத்தானே சுயபரிசோதனை செய்துகொள்கிறார். அப்போதுதான் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு அதிகமாக பேட்டை விட்டு அவுட் ஆகிறோம் என்பதை உணர்கிறார். சிட்னியில் பேட்டிங் ஆட இறங்கிய போது ஒருவித தீர்க்கத்தோடு செல்கிறார். செட்டில் ஆகும் வரைக்கும் கவர் ட்ரைவே ஆடக்கூடாதென நினைக்கிறார். நாதன் ப்ராக்கென், ஆண்டி பிச்செல், ப்ரெட் லீ என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாருமே ஆப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீசி சச்சினை கவர் ட்ரைவ் ஆட தூண்டினர். ஆனால், சச்சின் உறுதியாக நின்றார்.

கிட்டத்தட்ட ஒரு தவ நிலைக்கு சென்றார். என்ன ஆனாலும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே தூண்டில் போல வீசப்படும் பந்துகளை தொடவே கூடாதென இருந்தார். கவர் ட்ரைவை பற்றி யோசிக்கவே இல்லை. நேரம் ஆக ஆக தன்னுடைய தவத்தை நீட்டித்துக் கொண்டே சென்றார். ஆஸ்திரேலிய பௌலர்களால் சச்சினின் நிதானத்தை உடைக்கவே முடியவில்லை. 'ஆஸ்திரேலிய பௌலர்கள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், நான் தீர்க்கமாக இருந்தேன். நான் முதலில் பொறுமையை இழக்கிறேனா அல்லது ஆஸ்திரேலியாவின் 11 பேரும் முதலில் பொறுமையை இழக்கிறீர்களா என்பதை பார்த்துவிடுவோம் என முடிவெடுத்தேன்.' என சச்சினே அந்த இன்னிங்ஸை பற்றி கூறியிருக்கிறார்.

Sachin

'அவர்கள் உன்னை ட்ரைவ் ஆட வைக்கத்தான் முயற்சிக்கிறார்கள். நீ 150 ரன்களையே கடந்துவிட்டாலும் அவர்கள் நினைப்பதை நீ செய்துவிடாதே.' என சச்சினே தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டேதான் இந்த இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். கிட்டத்தட்ட 10 மணி நேரங்களுக்கு சச்சின் க்ரீஸில் இருந்தார். எந்த நொடியிலும் கவர் ட்ரைவ் ஆட வேண்டும் என அவர் யோசிக்கவே இல்லை. 241 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக பெவிலியனுக்கு சென்றார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 60 ரன்களுக்கு நாட் அவுட்டாக இருந்தார். தன் அண்ணன் தனக்கு விடுத்த சவாலிலும் வென்றார்.

AUSvIND: `ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினாலே அவுட்' - கோலியின் தவறு தொடர்கிறதா?

நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் மிகப்பெரிய ஏமாற்றமாக மாறி நிற்கிறார் விராட் கோலி. பெர்த்தின் இரண்டாம் இன்னிங்ஸில் அழுத்தமே இல்லாத சூழலில் ஒரு சதம் அடித்ததோடு சரி, மற்ற எல்லா இன்னிங்ஸ்களிலும் சொதப்பல்த... மேலும் பார்க்க

AUSvIND: திடீர் காயம்; போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ஹேசல்வுட் - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் மூன்றாவது போட்டியின் இடையிலேயே காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்ச... மேலும் பார்க்க

Virat Kohli: 'சச்சினிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் கோலி' - கவாஸ்கர் சொல்லும் அட்வைஸ்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைப்பெற்று வருகிறது.இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் இருக்கிறது. தற்போது மூன்றா... மேலும் பார்க்க

Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் சொன்ன பும்ரா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாம் நாள் போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பும்ராவின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பிய ஒருவருக்கு கெத்தாக பதிலளித்துள்ளார் பும்ரா.பிரிஸ்பேனில் ந... மேலும் பார்க்க

WPL 2025: 16 வயது மதுர பொண்ணு... ரூ.1.60 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை அணி - யார் இந்த கமலினி?

2008-இல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 17 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே மகளிர் பிரீமியர் லீக் (WPL) என்ற கிரிக்கெட் தொடரை பிசிசி... மேலும் பார்க்க

RCB: ``பெங்களூரு அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்!" - கேப்டன்சிக்கு விருப்பம் தெரிவித்த படிதார்

சையது முஷ்டாக் அலி டிராபி 2024 டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இதில், அஜின்க்யா ரகானேவின் அதிரடி ஆட்டங்களால் ஸ... மேலும் பார்க்க