செய்திகள் :

Saif Ali Khan stabbing case: இரவு புதரில் 5 மணிநேரத் தேடல்; 2 மணிக்குக் குற்றவாளியைப் பிடித்த போலீஸ்

post image
மும்பையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பிளேடால் தாக்கினார். பிளேடால் குத்தியதால் சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் காயம் ஏற்பட்டது.

தாக்கிய நபர் திருடும் நோக்கத்தில் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சைஃப் அலிகானைத் தாக்கிய நபரைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்தனர். சந்தேகத்தின் பேரில் 3 பேர் பிடித்து விசாரிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் புற்களும், புதர்களும் நிறைந்த இடத்தில் போலீஸார் இரவில் 5 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திக் குற்றவாளியைக் கைது செய்தனர். அந்த நபர் பெயர் ஷரிபுல் பஹிர் என்று தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்த நபர் பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

கைது செய்த போலீசார்

போலீஸாரின் விசாரணையில் குற்றவாளியின் மொபைல் போன் சிக்னல் தானே புறநகரில் உள்ள கழிமுகப்பகுதியில் இருப்பதாகக் காட்டியது. இதையடுத்து மும்பை மற்றும் தானே பகுதியைச் சேர்ந்த 150 போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இரவு 9 மணிக்குத் தேட ஆரம்பித்தனர். அவர்கள் அங்குள்ள மெட்ரோ கார்ஷெட் அருகில் இருந்த கழிமுகப்பகுதிக்குள் ஒவ்வொரு பகுதியாகத் தேடினர். டார்ச் லைட் துணையுடன் ஒவ்வொரு மரம், அடர்ந்த புதருக்குள் தேடினர். அப்பகுதியில் இருந்து யாரும் தப்பிச்செல்ல முடியாத அளவுக்கு நான்கு புறமும் தடுப்புகளை அமைத்தனர். இரவு அங்குள்ள வீடுகளில் கதவைத் தட்டி குற்றவாளியின் புகைப்படத்தைக் காட்டி இங்கு வந்தாரா என்பது குறித்துக் கேட்டனர். அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் குறுகலான தெரு வழியாகச் சென்றபோது அங்கு மாங்குரோவ் செடிகளும், புதர்களும் இருந்தன. அதற்குள் சோதித்து பார்த்தபோது உள்ளே பஹிர் பதுங்கி இருந்தார். அதிகாலை 2 மணிக்கு போலீசார் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

இத்தேடுதல் வேட்டை குறித்து இன்ஸ்பெக்டர் சச்சின் ரானே கூறுகையில்,''குற்றவாளியைப் பிடிக்க 500 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். இதில் குற்றவாளி சைஃப் அலிகானைத் தாக்கிவிட்டு 5 மணி நேரத்திற்கும் மேல் பாந்த்ரா, கார்ரோடு பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். கார்ரோடு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் உறங்கிவிட்டு பாந்த்ரா வந்து ரயில் மூலம் தாதர் சென்றார். தாதரில் இருந்து ஒர்லிக்கு பஸ்சில் சென்று அங்குள்ள வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் ரயில் மூலம் தானே சென்றுள்ளார். அந்த நபர் அணிந்திருந்த ஷு அடையாளம் காண மிகவும் உதவியாக இருந்தது. இரவு தானேயில் பதுங்கி இருப்பது தெரிந்தவுடன் 40 ஏக்கர் கொண்ட இடத்தில் தேட ஆரம்பித்தோம். அங்கு சாக்கடைகளும், செடிகளும் அடர்ந்து காணப்பட்டது. இறுதியில் ஒரு புதருக்குள் டார்ச் அடித்து பார்த்தபோது உள்ளே பதுங்கி இருந்தான்.

குற்றவாளி பிடிபட்ட இடம்

விசாரித்தபோது அவசரமாக அவனுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. எனவேதான் பணத்தைத் திருடிக்கொண்டு உடனே பங்களாதேஷ் செல்லத் திட்டமிட்டு இருந்தான். இதற்காக கடந்த 6 மாதங்களாக பல்வேறு பெயர்களில் மும்பையில் பதுங்கி இருந்துள்ளான். சைஃப் அலிகான் வசிக்கும் கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன் வேறு ஒருவரது வீட்டில்தான் திருட முயற்சி செய்துள்ளான். ஆனால் அந்த வீட்டில் உள்ளே நுழைய முடியாத காரணத்தால் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்துள்ளான்''என்றார்.

"விசாரணையை தவறான பாதையில் கொண்டுசெல்ல முயன்ற கிரீஷ்மா" - இருந்தும் நீதி கிடைத்தது எப்படி?

கேரள மாநிலம் பாறசாலை ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களை நிரூபித்த போலீஸாருக்க... மேலும் பார்க்க

காதலனுக்கு கஷாயத்தில் விஷம்; காதலி கிரீஷ்மாவுக்கு சாகும்வரை தூக்கு - தண்டனை விவரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜிக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கு நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

சேலம்: துணை மேயர் வீட்டில் கொள்ளை சம்பவம்; சிசிடிவியில் பதிவான கர்சிஃப் திருடர்கள்.. போலீஸ் விசாரணை!

சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதா தேவி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு வீராணம் காவல் நிலைய எல்லையில் கோராத்துப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து வருகிறது. கடந்த 07.01.2025 ம் தேதி இரவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தலைமைக் காவலர்; அடிபடும் இன்ஸ்பெக்டர் பெயர்.. என்ன நடந்தது?

நீடாமங்கலம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்தானமேரி. அதே காவல் நிலையத்தில் சித்ரா என்பவர் தலைமைக் காவலராக இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன்இந்த நிலையில் நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக சித்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கணவனிடம் காட்டிக்கொடுத்த கூலிப்படை... கொலை முயற்சியில் சிக்கிய மனைவி!

ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே உள்ள தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். சென்ட்ரிங் காண்ட்ராக்டராக பணிபுரியும் இவருக்கு கோட்டை ஈஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ... மேலும் பார்க்க

``கனிமவள கொள்ளை ஆதாரத்துடன் புகார் கொடுத்தவர் லாரி ஏற்றிக் கொலை'' -கொதிக்கும் மக்கள்; நடந்தது என்ன?

கனிமவள கொள்ளை -ஆதாரங்களை இணைத்து மனு..புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் உள்ள வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளராகவும், அ.தி.மு.க-வில் ஒன்றிய பொறு... மேலும் பார்க்க