செய்திகள் :

Samantha: 'எனக்கு பொறாமையா?!' - நாக சைதன்யா இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா ஓப்பன் டாக்

post image
2010-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான 'Citadel'-ல் நடித்திருந்தார். அந்தத் தொடரில் சமந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா அளித்த பதில் வைரலாகி வருகிறது.  

சமந்தா
சமந்தா

நேர்காணலில் பேசிய சமந்தா, “திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமே பெண்ணின் முழுமைக்கு அர்த்தம் என்று இந்த சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம். பெண்கள் திருமணமாகி குழந்தைகள் பெற்று இருந்தால் தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள்." என்றார்.

இதனைத்தொடர்ந்து கணவர் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றபோது அல்லது வேறொரு உறவைத் தழுவியபோது எப்போதாவது ‘பொறாமை’ அடைந்திருக்கிறீர்களா என்று அந்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ``என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவில்லை என்றால், நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது தவறு” என்று தெரிவித்திருக்கிறார். 

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா

அதற்கு பதிலளித்த சமந்தா, “ நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமைதான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை" என்று கூறியிருக்கிறார். இதனிடையே சமந்தாவின் சமீபத்திய தோற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா
சமந்தா

Vidaamuyarchi: ``அஜித் சார் அருமையாக நடிச்சுருக்காரு, ஆனா..." - வெங்கட் பிரபு கூறியதென்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 6) ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன்... மேலும் பார்க்க

விடாமுயற்சி விமர்சனம்: நாயக பிம்பம் தவிர்த்த அஜித்; சஸ்பென்ஸ் த்ரில்லராக மிரட்டுகிறதா இந்த முயற்சி?

அஜர்பைஜான் நாட்டுத் தலைநகர் பாக்குவில் தன் மனைவி கயலுடன் (த்ரிஷா) வாழ்ந்து வருகிறார் அர்ஜுன் (அஜித் குமார்). இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில், மனஸ்தாபங்கள் காரணமாக விவகாரத்து பெற விரும்பு... மேலும் பார்க்க

Vidaa Muyarchi: அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி மீண்டும் இணையுமா? -மகிழ் திருமேனி அளித்த பதில் என்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில் இன்று (பிப்ரவரி 6) பிரமாண்டமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர... மேலும் பார்க்க

Vidaa Muyarchi: 'அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!'- அஜித் குறித்து ஆரவ்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில் இன்று (பிப்ரவரி 6) பிரமாண்டமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர... மேலும் பார்க்க