செய்திகள் :

Santosh: இந்தியாவில் சிக்கலில் 'சந்தோஷ்' - ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தில் என்ன பிரச்னை?

post image

பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சந்தோஷ்' திரைப்படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படமாகும்.

இப்படம் கடந்த ஆண்டு பல நாடுகளில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இதை இந்தியாவில் வெளியிட இயக்குநர் சந்தியா சூரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால், இப்படத்தில் இருக்கும் பல்வேறு வசனங்களையும், காட்சிகளையும் நீக்குமாறு தணிக்கை வாரியம் (CBFC) கூறி, தடை விதித்திருக்கிறது.

சந்தோஷ் திரைப்படம்

தணிக்கை வாரியம் பக்கம் பக்கமாக காட்சிகளை நீக்க குறிப்புகள் கொடுத்துள்ளதால் படத்தை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டு, உடைந்துபோயிருக்கிறார் சந்தியா சூரி. தணிக்கை வாரியம் சொல்லும் காட்சிகளை எல்லாம் நீக்கினால் படம் நீர்த்துப்போய், அர்த்தமற்றதாகிவிடும் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

'சந்தோஷ்' படத்தின் கதை என்ன?:

காவல்துறை பணியில் இறந்துபோன கணவனின் அரசுப் பணியை ஏற்று, கான்ஸ்டபிளாக வட இந்திய கிராமம் ஒன்றின் காவல்நிலையத்திற்குப் பணிக்குச் செல்கிறார் சந்தோஷ்(பெண்). காவல்துறையின் அதிகார அடுக்கு மூட்டைகளில், அடி மூட்டையாக இருக்கும் கான்ஸ்டபிள், அதுவும் கணவனை இழந்த பெண் கான்ஸ்டபிள் என்ன பிரச்னைகளையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதாக கதைகளம் விரிகிறது.

சந்தோஷ் திரைப்படம்

சந்தோஷ், அப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க நேரிடுகிறது. அந்த வழக்கை விசாரிப்பது மூலம் பாலியல் கொடூரங்கள், சாதிய வன்கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் சாதிய, அதிகார ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்கிறார். அந்தச் சிறுமியின் வழக்கு இறுதியில் என்ன ஆனது என்பது பற்றியும், இயல்பாக இந்தச் சமூகத்தில் ஊறிப்போய் கிடக்கும் சாதிய, அதிகார கொடுமைகள் பற்றியும் பேசுகிறது இப்படம்.

சாதி - அதிகாரம் இரண்டின் ஒடுக்குமுறைகளை ஒரே வசனத்தில் போகிறபோக்கில் பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இடம்பெற்றிருக்கும் இந்த அழுத்தமான வசனமே இப்படத்தின் அழுத்தமான கதைக் களத்தை எடுத்துரைக்கிறது. இதுபோல பல வசனங்களும், அழுத்தமான காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசு, காவல்துறையை கேள்வியெழுப்பும் காட்சிகள். இவைதான் இப்படத்தை வெளியிடுவதற்கு சிக்கலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் சந்தியா சூரி

இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இதன் இயக்குநர் சந்தியா சூரி, "காவல்துறையை மையமாகக் கொண்ட பல படங்கள் வன்முறையைக் கொண்டாடியிருக்கின்றன. அதுபோல எனது படம் வன்முறையைக் கொண்டாடவில்லை. அதற்கு எதிராகப் பேசுகிறது. படத்தின் உயிரோட்டமான காட்சிகளை நீக்காமல், அதன் சாராம்சம் நீர்த்துப்போகாமல் இந்திய மக்களுக்கான 'சந்தோஷ்' படத்தை, இந்திய மக்களிடமே கொண்டு சேர்ப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vikatan Whatsapp Channel

''அவங்க என்னை நடிக்காதீங்கன்னு சொன்னா அந்த நிமிஷமே நிறுத்திடுவேன்'' - நடிகை மதுபாலா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்க... மேலும் பார்க்க

ஆரம்பத்தில் ஓகே... ஆனா முடிவில் மாஸ்! - அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்த்த அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

’நான் மாடர்ன் பொண்ணு, அழுமூஞ்சி கிடையாது, அப்படி நடிக்க பிடிக்கல’ - நடிகை அஸ்வினி ஓப்பன் டாக்!

''நான் கன்னடப்பொண்ணு. ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையிலதான். அப்பா அங்க பிசினஸ் பண்ணிட்டிருந்தாரு. நான் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். அப்ப பெங்களூர்ல எனக்கு இன்டர்வியூ வந... மேலும் பார்க்க

சொந்தமாக தீவு வைத்திருக்கும் பிரபல நடிகை; யார் இந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்?

இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார். நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோட... மேலும் பார்க்க

``மறுமணம் பண்ணிருக்கலாமேன்னு அம்மாவை இப்பவும் திட்டுவேன்!'' - `மைனா' சூசன் பேட்டி

திருமணமாகப்போகும் ஆண்கள், திருமணம் ஆன ஆண்கள் ரியல் லைஃபில் எதிர்கொள்ளப்போகும்; எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்திய எதிர்மறை கதாப்பாத்திரத்தால்… இப்போதும் மிரட்டிக்கொண்டிஇருப்பவர் வைத்துக்கொண்டிருப்ப... மேலும் பார்க்க

ரசிகர்கள், பயணிகள் நடிகர் மம்மூட்டியின் வீட்டில் தங்க ஏற்பாடு - ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

மலையாள மெகாஸ்டார் நடிகர் மம்மூட்டி-க்கு கேரளாவில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் சுமார் 10 ஆண்டுகள் வசித... மேலும் பார்க்க