திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்
ஆரம்பத்தில் ஓகே... ஆனா முடிவில் மாஸ்! - அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்த்த அனுபவம் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தல அப்படினு என்ன கூப்பிடாதீங்கன்னு அவரும் எவ்வளவு தான் சொன்னாலும், தலையே போனாலும் அப்படி தான் கூப்பிடுவோம்னு அடம்பிடிக்கிற அளவுக்கு அவ்வளவு ரசிகர்கள்.
ஆம், அவர் தான் அஜித்குமார் என்னும் AK.

பலரும் அவரைப்பற்றி கூறும்போது அவர் மிகவும் சாந்தமானவர் என்று கூறுவதுண்டு. உலகமே அவரை தல தல என்று அழைத்தாலும் எந்த தலை கனமும் இல்லாதவர் அப்பிடின்னு மிக உயர்வாகவே கூறுவர்.
அப்படிப்பட்ட ஒரு மனிதரை சந்திக்கும் ஓர் அரிய வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. எனக்கு வெகுநாளாகவே கார் ரேஸ் போன்றவற்றை நேரில் பார்த்து ரசிக்க மிகவும் ஆசை. இருப்பினும், அதற்கான சரியான சமயம் கிடைக்கவே இல்லை.
Formula உலகின் மெக்கா என்றழைக்கப்படும் Monza போன்றதொரு நகரத்தின் மிக அருகில் வசித்துவந்தாலும் அது அதற்கு என்று ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா.
ஆனால் திடீரென்று ஒரு நாள் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் இத்தாலியில் நான் வசிக்கும் நகரங்களுக்கு அருகில் நடைபெறுவதாக அறிந்ததும் சட்டென்று முடிவு செய்துவிட்டேன். இது தான் அந்த அழகிய தருணம் என்று.

உடனே டிக்கெட் எடுத்து, ஊருக்கு எல்லாம் தம்பட்டம் அடித்தாயிற்று. சும்மா இருப்பார்களா நம் நண்பர்கள்? அவர்களும் ஆயத்தமானார்கள்.
சில பல காத்திருப்புகளுக்கு பின், அந்த நாளும் வந்தது. Milan-ல் இருந்து காலையில் கிளம்பி, வழியில் Florence அருகில் மற்றொரு நண்பரையும் ஏற்றிக்கொண்டு 9 மணிக்குள் சென்றுவிட திட்டம். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று சும்மாவா சொன்னார்கள்?
கிளம்பிய சிறிது நேரத்திலேயே நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. பலத்த மழையின் காரணமாக அவரது ரயில் ரத்து என்று. சரி என்று உடனே அவரை வேறு ரயில் மூலமாக Bologna என்ற நகரத்துக்கு வர சொல்லி, அங்கே சென்று அவரையும் ஏற்றி கொண்டு விரைந்தோம்.
அப்படி இப்படி என்று Mugello சென்று சேரும் பொழுது கடிகாரம் பத்து மணி என்று பல் இளித்துக்கொண்டிருந்தது. நம் நேரம், லேசாக மழையும் தூறிக்கொண்டிருந்தது.

என்னதான் கார் ரேஸ் பார்க்க ஆர்வம் இருந்தாலும் நம்ப தல இருக்கும் இடத்தை தான் முதலில் தேடினோம்.
நேரே அவரது pit ஸ்டாப் சென்று எட்டி பார்த்தபின் தான் நிம்மதி. ஆம், அது நம் தல தான். இருக்கையில் சாய்ந்த படியே, தலையில் headphone பொருத்தி திரையில் விறுவிறுப்பான அவரது டீம் ஸ்டேட்டஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.
எங்களில் சிலர் எட்டி எட்டி பார்த்து கொண்டிருப்பதை உள்ளே சிகப்பு குல்லாவுடன் இருந்த ஒருவர் கண்டுவிட்டார். நேரே எங்களை நோக்கி தான் வந்தார். நாங்கள் கூட, சரி அவர் வந்து நம்மளை தலையிடம் அழைத்து சென்று போட்டோ எடுக்க வழிவகை செய்வார் என்று ஆனந்தத்தில் காத்திருந்தோம்.
ஆனால் வந்தவரோ, இங்கே நிற்கவேண்டாம், நின்றால் அவர்களுக்கு தடையாக இருக்கும் எனவும், மாலை 6 மணிக்கு மேல் அவரே வருவார், நீங்கள் அப்பொழுது போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று கூறி சென்றார். பின் தான் தெரிந்தது அவர் தான் அஜித்தின் மேனேஜர் சிவா என்று.

அப்படியே தூரத்தில் இருந்து அவரை கண்ட சந்தோசத்துடன் கார் ரேஸ் கண்டு கொண்டிருந்தோம். இந்த ரேஸில் ஒவ்வொரு அணியிலும் மொத்தம் மூன்று டிரைவர்கள். ஒரே காரை ஒவ்வொருவரும் வரிசையாக ஓட்டி கலக்கி கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் காத்திருந்தலுக்கு பின், நம் அஜித் கார் ஓட்ட துவங்கினார். அந்த காரின் முகப்பில் KUM என்று அவரின் பெயரை கண்டதும் ஒரே கொண்டாட்டம் தான் அங்கே.

என்ன தான் முயற்சித்தாலும் அவருக்கு சிறிது தடுமாற்றம் இருப்பது போன்றே எங்களுக்கு தோன்றியது. 20-21 இருந்த அவரது டீம் position இவர் முடிக்கும் பொழுது 25 ஆக பின்தங்கியது.
சிறிதே கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தோம். இதோ அவரது டீமில் இருந்து அடுத்த டிரைவர் ஓட்ட வேண்டிய தருணமும் வந்தது.
அடுத்து வந்த மாத்யூ மிக சாமர்த்தியமாக ஒட்டி அதை 19வது position வரை கொண்டு வந்தார். அன்றைய ரேஸ் முடிந்ததும் நேரே அஜித்குமார் racing பிட் ஸ்டாப் தான் ஓடி வந்தோம்.
நல்வாய்ப்பாக அன்று கூட்டமும் வெகுவாக இல்லை. 4-5 சென்னை வாசிகள் நாங்களும், 10-15 சிங்கள தமிழர்களும் தான் இருந்தோம்.

அவரும் pit ஸ்டாப் உள்ளேயிருந்து வெளியில் வந்தார். ரேஸ் ட்ராக் சூட்டுடன் grey கலர் pullover அணிந்த படியே வந்தவர் நேரே என்னை நோக்கி வந்து புன்முறுவலுடன் கை குலுக்கினார். எப்படியும் யாரோ ஒருவர் முதல் ஆளாக இருக்க வேண்டும் தானே? ஆனால் அதிஷ்டவசமாக அது நானாக இருந்ததால் என்னால் சந்தோசத்தை அடக்கவே முடியவில்லை.
அஜித் தன் உடம்பை மிகவும் குறைத்து ரொம்பவே slimஆக இருந்தார். விசாரித்ததில், இதுவும் அவர் தனது கார் ரேஸிங் கனவுக்காக மெலிந்ததாக தெரிந்தது. காரில் இருந்து எவ்வளவு எடை குறைக்க முடியுமோ அவ்வளவு நல்லது என்று தன் எடையையும் சேர்த்து குறைத்துள்ளார் அஜித்.

வழக்கமான குசலவிசாரிப்புக்கு பின், நாங்கள் இங்கே இருக்கிறோமா, எவ்வளவு காலமாக இருக்கிறோம் போன்ற கேள்வி கேட்டு விசாரித்தார். ஏனோ அவரது குரல் எங்களுக்கு சரிவர கேட்கவேயில்லை. அவர் குரலோ மென்மையாக, கூர்ந்து கவனித்தால் மட்டுமே என்ன கூறுகிறார் என்று அறியமுடியும் படி இருந்தது.
பின் ஒருவர் ஒருவராக போட்டோ எடுத்து கொண்டோம். அன்று சனிக்கிழமை, ரசிகர்களும் பெரிதளவில் இல்லை என்பதால் அவரால் சிறிது நேரம் நிம்மதியாக எங்களுடன் செலவழிக்க முடிந்தது.
பின் அவரது மேனேஜர் உடனும் பேசிவிட்டு வெளியேறினோம். Good bad ugly பட ப்ரோமோஷன் நேரம் அநேகமாக Europe-இல் தான் இருப்போம் என்றது போல் கூறினார்.
ஆனால் ஒன்று நிச்சயம். அனைவரும் போற்றுவது போல் அஜித் எந்த தலை கனம் இல்லாத மனிதராகவே தென்பட்டார்.
அவரை கண்டு, கை குலுக்கிய சந்தோசத்தில் சென்று உறங்கி, அடுத்த நாள் மீண்டும் கார் ரேஸ் காண வந்து சேர்ந்தோம். இன்று நாங்கள் கண்ட அஜித் நேற்றைய அஜித்தை விட பலமடங்கு லாவகமாக, வேகமாக காரை ஓட்டினார். நேற்றை விட இன்று மிகவும் விரைவாக ஒட்டியது போன்ற ஒரு தோற்றம் தான் எங்களுக்கு தென்பட்டது.

கடைசி ஒன்றை மணிநேரம் அந்த சுற்றுகளை மிக லாவகமாக ஓட்டிய அஜித் தனது அணியை மூன்றாம் இடத்தில வெற்றி பெற உதவினார். இறுதியில் காரை ட்ராக்கில் நிறுத்தி கீழே இறங்கி தன் தலைக்கவசத்தை கழற்றினார்.
அவ்வளவு தான், அரங்கமே AK, தல என்று கூச்சலிட்டது. தன் ரசிகர்கள் கரகோஷமிடுவதை கண்ட தல எங்களை நோக்கி கையசைத்த படியே நடந்து வந்தார். நடுவே விரலை கோர்த்து heart விட்டது, flying கிஸ் கொடுத்தது எல்லாம் தனிக்கதை.
இறுதியில் அவரது catagoryயில் மூன்றாவதாக வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்று இறங்கி வந்து அந்த காரை வணங்கியது பலரது பார்வையையும் கவர்ந்தது. பின் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறே நடந்து வந்தார்.
அந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருந்த போதே அவருக்கு ஒரு போன் வந்தது. அநேகமாக அது அவரது மனைவியின் தொலைபேசியாகவே இருக்க வேண்டும்.

சிறிது நேரம் மனம் விட்டு பேசிய பின் தல நேரே podium நோக்கி விரைந்தார். கூடவே இந்திய நாட்டு தேசிய கொடியையும் கொண்டு சென்றார்.
ஒருவழியாக அவர் podium-இல் நின்று வெற்றி பதக்கத்தை வாங்கியதை காணும் சந்தர்ப்பமும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. கிடைத்த அந்த பதக்கத்தை அவரும் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட எல்லோரும் ஒன்றாக புகைப்படம் எடுத்தார்.

பின், மீண்டும் அவரது தரிசனம் வேண்டி அனைவரும் அவரது pit ஸ்டாப் சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இருக்கும். அதில் 90 சதவிதம் இலங்கை மக்கள் தான் என்றால் மிகையாகாது. விசாரித்ததில் இலங்கையிலும் அவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் என்று தெரிந்தது.
ஒருவர் அல்ல, இருவர் அல்ல, பல பெண்கள் அவருடன் போட்டோ எடுத்து வந்து ஆனந்த கண்ணீருடன் சென்றனர். சந்தோசத்தில் அவர்களுக்கு வார்த்தைகூட வெளிவரவில்லை. ஏதோ ஒரு பரவச நிலையில் இருந்தனர். அவ்வளவு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.
நான் நேற்றே அவருடன் புகைப்படம் எடுத்ததால் மற்றவர் எடுக்கட்டும் என்று காத்திருந்தேன். முடிவில் மீண்டும் ஒருமுறை அவருடன் புகைப்படம் எடுக்க நினைத்து பொறுமையாக இருந்தேன்.
அவரால் நீண்ட நேரம் அங்கேயே நிற்க முடியவில்லை. ஏதோ வலியில் இருப்பது போன்று தென்பட்டார்.
பின் எங்கள் துரதிஷ்டம், அவர் பாதியிலேயே சோர்ந்து சென்று விட்டார்.
ஒருபுறம் அவரும் சக மனிதர் தானே என்று அறிவு கூறினாலும், இன்னும் சிறிது நேரம் இருந்து போட்டோ எடுக்க அனுமதித்திருக்கலாமே என்று இதயம் தவிக்க தான் செய்தது.
ஆனால் ஒன்று, அந்த மனிதனுக்காக அங்கே இருந்த மக்கள் ரியாக்ட் செய்ததை பார்க்கும் போது அவர் மீது இவ்வளவு பற்றா என்று ஆச்சர்யம் தான் மிஞ்சியது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.