செய்திகள் :

Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்லும் சீமான்!

post image

'சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!'

அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் ஆக்குகிறோம் என்று ஆதவ் அர்ஜுனா, தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜூனா - புஸ்ஸி ஆனந்த்
ஆதவ் அர்ஜூனா - புஸ்ஸி ஆனந்த்

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழா நேற்று பூஞ்சேரியில் நடந்திருந்தது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் போது அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்தும், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

அதில் ஆதவ் அர்ஜூனா, 'அண்ணாமலையாச்சும் ஒரு 10 பேரைச் சேர்த்துக்கிட்டு 18% ஓட்டு எடுத்துட்டாரு. எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டாங்க...' என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீமான்
சீமான்

இந்நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் ஆதவ்வின் கருத்து குறித்துக் கேட்டனர்.

அதற்குச் சீமான், 'புறணி பேசுறதுக்கு நான் என்ன பதில் சொல்றது. இதே ஆதவ்தான் அ.தி.மு.க கூட்டணிக்கு வாங்க, துணை முதல்வர் ஆக்குறோம்னு சொன்னாரு...' எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

TVK : '120 நாள் பிளான்; சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய்?' - திட்டம் என்ன?

'2026 இல் இந்த திமுக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.' என தவெக சார்பில் சி.டி.ஆர், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் என மாறி மாறி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.TVK Vijayகோயம்புத்தூரில் பூத்... மேலும் பார்க்க

புதுச்சேரி: "பள்ளிகள் திறப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்" - அதிமுக கூறும் காரணம் என்ன?

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய ... மேலும் பார்க்க

"நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என ஆளுநர் பயந்திருக்கலாம்" - மசோதா ஒப்புதல் குறித்து ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்றது.அதில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவம் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாட... மேலும் பார்க்க

"தமிழக மக்கள் கட்சிகளின் செயலைத்தான் பார்ப்பார்கள்; பணத்தை அல்ல” - விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பதில்

விருதுநகரில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ஞானசேகரன் வழக்கை நடத்திய சட்டத்துறை, நீதித்துறைக்குப் பாராட்டுக்கள். கடுமையான தண்டனையை விதித... மேலும் பார்க்க

"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”தமிழக முதல்வர் ஞானசேகரன் பாலியல் வழக்கை பற்றி பெருமையாக பேசுகிறார். அந்த தீர்ப்பை பற்றி பெருமையாக பே... மேலும் பார்க்க