செய்திகள் :

Serial Update: ``சுயமரியாதை இழக்கிறேன்னு தோணுச்சு; அதான் இந்த முடிவு" - ஜோவிதா லிவிங்ஸ்டன்

post image
ஜீ தமிழ் சேனலில் ஓளிபரப்பாகி வந்த 'மௌனம் பேசியதே' சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த ஜோவிதா லிவிங்ஸ்டன் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். சீரியல் தொடங்கி நான்கு மாதங்களே ஆகியிருக்கும் சூழலில் அவரது வெளியேற்றம் தொடரைப் பார்த்து வந்த ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

முன்னதாக சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து முறைப்படி அறிவித்திருந்த தன்னுடைய அறிவிப்பில்,

``சமீப சில நாட்களாக என்னுடைய துளசி கேரக்டர் எனக்குத் திருப்தியளிப்பதாக  இல்லை. ரொம்பவே சுயநலமிக்கதாகவும் எப்போதும் மனச்சோர்வு தரக்கூடியதாகவும், இதைவிடவெல்லாம் மேலாக நம் கலாசாரத்துக்கு எதிராகச் செயல்படக்கூடியதாகவும் மாறத் தொடங்கியது. இந்த நிலை மாறும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதனால் தொடர்ந்து அத்தகைய ஒரு கேரக்டரில் நடிப்பது எனக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் ஏற்புடையதா தெரியல.

தவிர கொஞ்ச நாளாகவே ஓய்வில்லாம நடிச்சிட்டிருந்தது உடலளவிலும் சோர்வை உண்டாக்கியிருக்கு.மேலும்  நேர்மையாகவும் சுயமரியாதையாகவும் வாழணும்னு ஆசைப்படறவ நான். சமீப காலமா இந்தக் குணங்கள்ல இருந்து விலக என்னை அனுமதிச்சிட்டேனோனு ஒரு உணர்வு வரத் தொடங்குச்சு. அதனால ஒரு கசப்பான புன்னகையுடன் இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டியதாகிடுச்சு. இதுவரை எனக்கு ஆதரவு தந்த அத்தனை பேருக்கும் என் நன்றி' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோவிதா

இந்த வெளியேற்றம்  தொடர்பாக சீரியலின் யூனிட் தரப்பில் சிலரிடம் பேசியபோது, ``சேனல்ல முக்கியமான பொறுப்புகள்ல சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு. இந்த மாற்றங்களின் தொடர்ச்சிதான் இது. இன்னும்கூட சில சீரியல்கள்ல அதிரடி மாற்றங்கள் நிகழலாம்னு சொல்றாங்க. ஜோவிதாவைப் பொறுத்தவரை அவர் நடிச்சிட்டிருக்கும் போதே வேற ஹீரோயின் தேடத் தொடங்கியிருக்காங்க. அதனாலதான்  முந்திக்கிட்டு அவர் வெளியேறியதோட, சுயநலம் ரொம்ப முக்கியம்னு ஒரு வார்த்தையையும் குறிப்பிட்டிருக்காங்க" என்கின்றனர்.

Bigg Boss: அரசு விழாவில் சிறப்புப் பேச்சாளராகப் பேசும் `பிக் பாஸ்' முத்துக்குமரன் - பின்னணி என்ன?

பிக் பாஸ் சீசன் 8 ல் கலந்து கொண்டு டைட்டில் வென்ற ,முத்துக்குமரன் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.ஆட்சியர் ஜெயசீலன்விஜய் டிவியில் 'தமிழ்... மேலும் பார்க்க

Bigg Boss: `வீடு... 50 லட்சம் பணம்...' - பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி? வருமான வரித்துறை சொல்வதென்ன?

சூப்பர் சிங்கர் சீசன் 9ல் வெற்றி பெற்ற அருணா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ’சூப்பர் சிங்கரில் பரிசாகக் கிடைத்த வீட்டுக்கு இன்னும் குடிபோகவில்லை. குறிப்பிட்ட தொகையை வரியாகக் கட்டிய பிறகே வீட... மேலும் பார்க்க

Bigg Boss: கன்னட பிக்பாஸில் இருந்து விடை பெற்ற கிச்சா சுதீப் - அடுத்த தொகுப்பாளர் யார்?!

மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ்.தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணிக்கு பேய் ஓட்ட நினைக்கும் மனோஜ்; வித்யாவை ஏமாற்றிய மீனா!

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்து போட்டத் திட்டத்தின்படி, மீனா வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரின் புகைப்படத்தை தனது மொபைலில் எடுக்கிறார். இந்த விஷயத்தில் வித்யாவின் நிலையைப் பார்க்கும்... மேலும் பார்க்க

Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' - ரயான் எக்ஸ்க்ளூசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிந்திருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் பீஸ்ட்டாக அதிரடியாக ஆடியவர் ரயான். தன்னுடைய ரெமோ ஸ்டைலால் பல பெண்களின் க்ரஷ் லிஸ்டிலும் தற்போது இடம் பிடித்திருக்கிறார். அவரை சந்தித்துப் ... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் என்ன நடக்கும்?

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து vs ரோகிணி எனக் கதைகளம் நகர்கிறது. இடையிடையே மனோஜின் காமெடி, விஜயாவின் ரகளை, வித்யா-முருகன் காதல், மீனாவின் தொழில் பிரச்னை என ஸ்வாரஸ்யம் கூடுகிறது.சமீபத்திய எபிசோடுகளில் ... மேலும் பார்க்க