வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
Shah Rukh Khan: "33 ஆண்டுக்கால பயணத்திற்குப் பிறகுக் கிடைத்த கௌரவம்" - அல்லு அர்ஜுன் வாழ்த்து
71வது தேசிய விருதுகள் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சக கலைஞர்கள் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் 2021ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன், 2023க்கான தேசிய விருது வென்ற கலைஞர்களை வாழ்த்தியுள்ளார்.

"வாழ்த்துகள் விக்ராந்த் மாஸ்ஸி அவர்களே! #12th ஃபெயில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. மேலும் உங்கள் வெற்றி மிகவும் தகுதியானது என் சகோதரா.
இந்தப் படமும் தேசிய விருது வென்றதில் மிக்க மகிழ்ச்சி. மொத்த குழுவினருக்கும் குறிப்பாக வினோத் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற #RaniMukerji அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
#71stNationalAwards இல் கௌரவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்தியத் திரையுலகிற்கு ஒரு பெருமையான தருணம் இது!" எனப் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

முன்னதாக, "மதிப்பு மிக்க தேசிய விருதுகளில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது பெரும் ஷாருக் கான் அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள். இந்திய சினிமாவில் 33 ஆண்டு புகழ்மிக்க பயணத்திற்குப் பிறகு, இது மிகவும் தகுந்த கௌரவம்.
உங்கள் முடிவில்லாத சாதனைகளின் பட்டியலில் இன்னொரு சாதனை சேர்ந்துள்ளது சார். அதேபோல், இந்த மாயாஜாலத்தை உருவாக்கிய என் இயக்குநர் அட்லி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என வாழ்த்தியிருந்தார்.
தேசிய விருது பெற்ற தெலுங்கு சினிமா கலைஞர்களை வாழ்த்தும் வகையில், "71வது தேசிய விருதுகளில் தெலுங்கு சினிமா பிரகாசிப்பதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்களுக்கும் அனில் ரவிபுடி அவர்களுக்கும் பகவத் கேசரி படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் சிறந்த தெலுங்குப் படத்துக்கான விருதை வென்றதற்கு வாழ்த்துகள்.

என் அன்புள்ள சுக்ரிதிக்குச் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். இது எங்களுக்கு அனைவருக்கும், குறிப்பாக உங்கள் தந்தை சுகுமார் அவர்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம்.
ஹனுமன் படம் AVGC மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பிரிவில் வெற்றிபெற்றதற்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா, ஸ்டண்ட் கலைஞர்கள் நந்து மற்றும் ப்ருதுவிக்கும் VFX மேற்பார்வையாளர் ஜெட்டி வென்கட் குமாருக்கும் வாழ்த்துகள்!
#HanuMan படத்திற்கு இயக்குநர் @PrasanthVarma garu, ஸ்டண்ட் கலைஞர்கள் Nandu & Prudhvi, மற்றும் Jetty Venkat Kumar ஆகியோருக்கு AVGC மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பிரிவுகளில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
எனக்குப் பிடித்த பாலகம் பாடலுக்காக விருது பெறும் பாடலாசிரியர் கசரா ஷ்யாம் அவர்களுக்கும் வாழ்த்துகள். மிகவும் தகுதியான ஒன்று!" என எழுதியிருந்தார்.
இறுதியாக, "பேபி படத்துக்காகச் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதை சாய் ராஜேஷ் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையாகவே தகுதியான ஒன்று.
உங்கள் படம் தேசிய விருது வென்றிருப்பதில் மிகுந்த பெருமையடைகிறேன் (தயாரிப்பாளர்) சீனிவாசன் குமார் அவர்களே.
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்ற பி.வி.என்.எஸ் ரோஹித் அவர்களுக்கு மிகப் பெரிய வாழ்த்துகள்.
இந்த இணையில்லாத அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பேபி படத்தின் மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...