செய்திகள் :

Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாராக சொன்ன ஸ்ரேயாஷ்

post image

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 243 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பாக ஆடி 97 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஸ்ரேயாஷால் சதம் அடித்திருக்க முடியும். ஏனெனில், 19 வது ஓவரிலேயே ஸ்ரேயாஷ் ஐயர் 97 ரன்களை எட்டிவிட்டார்.

Shreyas

ஆனால், கடைசி ஓவரில் சஷாங்க் சுங் ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்கவில்லை. அவரே 6 பந்துகளையும் ஆடி 23 ரன்களை சேர்த்துக் கொடுத்தார். ஸ்ரேயாஷின் சதத்துக்காக சஷாங்க் சிங் சிங்கிள் எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால், களத்தில் ஸ்ரேயாஷ் ஐயர்தான் எனக்காக நீ சிங்கிள் எடுக்காதே.. என சஷாங்கிற்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இதுசம்பந்தமாக இன்னிங்ஸ் இடைவேளையில் பேசிய சஷாங்க் சிங், 'நான் ஆடியது ஒரு நல்ல கேமியோ. பெவிலியலிருந்து ஸ்ரேயாஷின் ஆட்டத்தைப் பார்க்க அத்தனை உத்வேகமாக இருந்தது. கடைசி ஓவருக்கு முன்பாக ஸ்ரேயாஷ் என்னிடம் பேசினார். 'நீ உன்னுடைய ஆட்டத்தை ஆடு. என்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காதை. பந்தை பார்த்து அதற்கேற்ப ஷாட் ஆடு!' என தெளிவாகக் கூறிவிட்டார்.
Shashank

பவுண்டரி அடிப்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் முயன்றேன். என்னுடைய பலம் என்னவென எனக்கு தெரியும். எனக்கு வராத விஷயங்களை முயற்சிக்க மாட்டேன்.' எனப் பேசியிருந்தார்.

அணியின் கேப்டனாக அணியை முன்னிலைப்படுத்தி ஸ்ரேயாஷ் பக்குவமாக நடந்திருக்கிறார்.

GT vs MI : 'மும்பை அணியில் இடம் பெறாத இளம் வீரர் விக்னேஷ் புத்தூர்!' - ஏன்?

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த விக்னேஷ் புத்தூர் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால், அந்த விக்னேஷ் புத்தூரை இப்போது நடந்து வரும் குஜரா... மேலும் பார்க்க

Ruturaj Gaikwad: 'ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கவே கூடாது!' - ஏன் தெரியுமா?

'ருத்துராஜ் - நம்பர் 3'பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மிக மோசமாக தோற்றிருக்கிறது. அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் இறங்காமல் நம்பர் 3 இல் இறங்கி வருவதும் தோல்விக்கு மிக முக... மேலும் பார்க்க

CSK vs RCB: "அந்த 6 ஓவர்லதான் எல்லாம் மாறுச்சு" - வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதர்

'பெங்களூரு வெற்றி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்... மேலும் பார்க்க

CSK vs RCB Exclusive: பயிற்சி முதல் சிக்சர் மழை வரை; சேப்பாக்கத்தில் தோனி | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Shardul Thakur : 'Unsold, கவுண்ட்டி திட்டம்... திடீர் அழைப்பு' - எப்படி கம்பேக் கொடுத்தார் ஷர்துல்?

'கவனிக்க வைக்கும் கம்பேக்!'ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலுமே ஊக்கமளிக்கக்கூடிய பல கம்பேக் கதைகளை நாம் பார்க்க நேரிடும். அந்த வகையில் இந்த சீசனின் முதல் கம்பேக்கை நிகழ்த்தி அத்தனை பேரையும் வியப்படைய வைத்திருக... மேலும் பார்க்க