செய்திகள் :

Shweta Menon: "தாய்மார்களுக்கு படப்பிடிப்புத் தளங்களில் வேலை நேர நிர்ணயம் வேண்டும்" - ஸ்வேதா மேனன்

post image

கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார்.

கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, அவர் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

ஸ்வேதா மேனன்
ஸ்வேதா மேனன்

இந்நிலையில் 'India Today'-விற்கு ஸ்வேதா மேனன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், "நான் கர்ப்பமாக இருந்தபோது 4 படங்களில் நடித்துள்ளேன். அதிகாலையில் எழுந்து படப்பிடிப்புக்குச் செல்வது கடினமாக இருக்கும்.

அதனை நான் இயக்குநர்களிடமும் சொன்னேன். அவர்களும் புரிந்துகொண்டார்கள்.

ஆனால் சிலர் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். நான் பதவியேற்ற முதல் நாளே பெண் நடிகைகளிடம் உங்களுக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

ஸ்வேதா மேனன்
ஸ்வேதா மேனன்

திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். பணிபுரியும் தாய்மார்களுக்குப் படப்பிடிப்பு தளங்களில் வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

துல்கர் சல்மான்: Lokah வெற்றியால் தள்ளிப்போகும் காந்தா வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காந்தா. மறைந்த நடிகர் தியாகராய பாகவதர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி இயக... மேலும் பார்க்க

Grace Antony: 'Finally we made it' - திருமணம் செய்துகொண்ட 'பறந்து போ' நடிகை கிரேஸ் ஆண்டனி

'பறந்து போ' படத்தில் நடித்த மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்று முடிந்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அ... மேலும் பார்க்க

மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் படம்; பாராட்டும் நெட்டிசன்கள்

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது. அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்து... மேலும் பார்க்க

Navya Nair: ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக ரூ. 1.14 லட்சம் அபராதம்; நவ்யா நாயரின் அனுபவப் பகிர்வு

விக்டோரியாவின் மலையாள சங்கம் ஏற்பாடு செய்த ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க மலையாள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மல்லிகைப் பூவை பெண்கள் சூடிக்கொள்வது வ... மேலும் பார்க்க

Lokah: லோகா யூனிவர்ஸில் இணையும் `மலையாள சூப்பர் ஸ்டார்'; இயக்குநரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பல பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நடுத்தர பட்ஜெட்டில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' மலையாளத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் வெற்றி... மேலும் பார்க்க

AMMA: ``என் ராஜினாமாவுக்கு விமர்சனங்கள் காரணமல்ல'' - ஓராண்டுக்குப் பின் மௌனம் கலைத்த மோகன்லால்

மலையாளத் திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க