கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
Siragadikka aasai : ரோகிணிக்கு பேய் ஓட்ட நினைக்கும் மனோஜ்; வித்யாவை ஏமாற்றிய மீனா!
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்து போட்டத் திட்டத்தின்படி, மீனா வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரின் புகைப்படத்தை தனது மொபைலில் எடுக்கிறார். இந்த விஷயத்தில் வித்யாவின் நிலையைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.
ரோகிணியின் வாழ்க்கைக்காக அவ்வளவு நாடகங்களை அரங்கேற்றி கடைசியில் ரோகிணியிடம் திட்டும் வாங்கி, இப்போது முத்துவிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார்.
வித்யா இரண்டு நாட்களாக அலுவலகம் செல்லவில்லை என்பதால் முருகன் அவரின் வீட்டு வாசலில் காத்திருக்கிறார். அவரை பார்த்ததும் அதிர்ச்சி ஆன வித்யா, முருகன் சொன்ன விளக்கத்தை கேட்டதும் வெட்கப்படுகிறார்.
முருகன் - வித்யா காதல் டிராக்கும் முத்து - மீனா காதல் காட்சிகளை போன்று ரசிக்க வைக்கிறது. முருகன் வித்யாவிடம் அப்பாவித்தனமாகப் பேசுவதை வித்யா ரசிக்கிறார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகிறது. முருகன் முத்துவுக்கு தெரிந்தவர் என்பது இன்னும் தெரியாது. இருவருக்கும் திருமணம் நடந்தால் ரோகிணிக்கு மேலும் பிரச்னைகள் வரும்.
முருகனை சந்தித்துவிட்டு மகிழ்ச்சியின் வெட்கத்துடன் அமர்ந்திருக்கும் வித்யாவை பார்க்க மீனா வருகிறார். அவரிடம் நட்பாகப் பேசி வித்யாவை தன் மொபைலில் போட்டோ எடுக்கிறார் மீனா. அதனை முத்துவிடம் கொடுக்கிறார்.
இதனிடையே ரோகிணியின் கனவில் மீனா பேய் வேடத்தில் வந்து மிரட்டுகிறார். `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!’ என்ற பழமொழிக்கு ஏற்ப ரோகிணி பலப் பொய்களை சொல்லி சொல்லி, மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
பொதுவாக சீரியல்களில் வில்லி ரோலில் நடிப்பவர்கள் பொய், பித்தலாட்டம் செய்தாலும் நிம்மதியாக இருப்பது போன்று காட்டப்படும். ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டும் தான் நேர்மையற்றவர்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பயத்தில் இருப்பார்கள் என்பதை பிரதிபலிக்கும் காட்சிகளை வைத்துள்ளனர்.
ரோகிணி இரவில் அலறுவதை பார்த்து மனோஜ் பயப்படுகிறார். மீனா பேயாக வந்து மிரட்டுவதாக கனவுக் காணும் ரோகிணி தூக்கத்தில் மனோஜை எட்டி உதைத்து கீழேத் தள்ளுகிறார். மனோஜ் பயத்தில் உறைந்துப் போகிறார். நேற்று எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் விஜயா ரோகிணிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து போயோட்ட ஆளை வரவழைக்கிறார். ரோகிணி தனது பொய்களால் இன்னும் எத்தனைப் பிரச்னைகளை சந்திக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
அடுத்த எபிசோடில் முத்து தனது மொபைல் போன் விஷயத்தை பெரிதுப்படுத்தி ரோகிணியை சிக்க வைப்பாரா அல்லது காப்பாற்றுவாரா என்பது தெரிந்துவிடும். !
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...