Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
Soori: "தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்" - பரவிய போலிச் செய்திக்கு நடிகர் சூரி பதிலடி
அரசியல் குறித்து நடிகர் சூரி பேசியது போல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், "தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்குத் தீங்கையே தரும்" என்று விளக்கியுள்ளார் நடிகர் சூரி.

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்ச் செய்தியில், "பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார். - நடிகர் சூரி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தெளிவுபடுத்திய சூரி, "தம்பி, தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்குத் தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம்.

இந்தச் சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது, அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள். எனக்கும் பல வேலைகள் உள்ளன, உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செலுத்துவோம்" எனப் பொய் பரப்பியவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.














