ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
South Korea: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக்கிற்குக் கைது வாரண்ட்; பதற்றத்தில் தென் கொரியா
தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல். இவர் டிசம்பர் 3-ம் தேதி கொடுத்த ஒரு தொலைக்காட்சி உரையில், அரசுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை அகற்றுவதற்காக எனக் கூறி, தென் கொரியாவில் ராணுவ ஆட்சி சட்டத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாட்டில் குழப்பமான சூழல் நிலவியது. ஆனால், இந்த சட்டத்தை அகற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு விரைந்தனர். அப்போது ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்தனர். இதற்கிடையில், ராணுவ ஆட்சி 6 மணி நேரத்துக்குள் திரும்பப்பெறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ராணுவச் சட்டத்தை அறிவிப்பது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதத்தில் ராணுவ அதிகாரிகளுடன் யூன் சுக் இயோல் விவாதித்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நுழைந்த ராணுவ வீரர்களிடம், தேவையேற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதித்திருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால், தென் கொரியாவில் அரசியல் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், இடைக்கால அதிபராக நிதியமைச்சர் சோய் சாங்-மோக் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், யூன் சுக் இயோல் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கூட்டுப் புலனாய்வுத் தலைமையகத்தால் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் யூன் சுக் இயோல் ஆஜராகாததால், அவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தென் கொரிய நீதிமன்றம், யூன் சுக் இயோலுக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...