தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்
Sri Lanka: "கடன் நிலுவையை அடைத்துவிட்டோம்; ஆனாலும்..." - இலங்கை நிதி அமைச்சகம் சொல்வதென்ன?
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. காய்கறி முதல் பெட்ரோல் வரை தட்டுப்பாடு நிலவியது.
இந்நிலையில், தற்போது ஹாங்காங்கை சேர்ந்த ஃபிட்ச் ரேட்டிங் (நம் நாட்டின் சிபில் அமைப்பைப் போல) அமைப்பு இலங்கை நாட்டின் கிரெடிட் ரேட்டை அப்கிரேட் செய்ய முடிவெடுத்தது. அதையொட்டி, நேற்று (டிசம்பர் 22) இலங்கை நிதி அமைச்சகம், "கடந்த டிசம்பர் 20-ம் தேதி இலங்கை, தான் முன்பு வாங்கிய கடனின் நிலுவையை முழுவதுமாக அடைத்துவிட்டது" என்று கூறியுள்ளது.
இதனால் ஃபிட்ச் ரேட்டிங்கில், இலங்கை அரசின் ரேட்டிங் 'CCC+' -ல் இருந்து 'CCC-' ஆக மாறியுள்ளது.
இது குறித்து இலங்கை நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த மஹிந்த சிறிவர்தன பேசும்போது, "இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது மனிதர்களால் ஆனது. முன்பே, சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம்.
இப்போது என்ன தான் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தாலும், கடனை அடைத்துவிட்டாலும் மக்களுக்கு இன்னும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வலி மறையவில்லை" என்று கூறியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...