தேசியக் கல்விக் கொள்கை: மக்களவையில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிா்ப்புத் தெ...
SSMB29 : மகேஷ் பாபுவுடன் இணையும் பிரியங்கா சோப்ரா; ஒடிஸாவில் படப்பிடிப்பைத் தொடங்கிய ராஜமௌலி!
பாகுபலி, ‘RRR’ போன்ற பிரமாண்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் அடுத்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் பாபுவும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார்கள். ‘SSMB29’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒடிஸா மாநிலத்தில் தொடங்குகிறது. ஒடிஸா மாநிலத்தில் பலரும் அறியாத இடங்களை இந்தப் படத்துக்கான இடங்களாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் வேலை செய்வதற்காக, 500 பேர் கொண்ட குழுவினரை ஒடிஸாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை தங்க வைக்க ஒடிஸாவின் செமிலிகுடாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மார்ச் 28 வரை தியோமாலி, தலமாலி மலைகளில் படப்பிடிப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பழங்குடி கலாசாரத்திற்கும், இயக்கை அழகுக்கும் பெயர்பெற்ற கோராபுட் மாவட்டத்தில் படக் குழுவினர் தற்போது முகாமிட்டுள்ளனர். மும்பையில் நடந்த தனது சகோதரர் சித்தார்த் சோப்ராவின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது படப்பிடிப்பில் இணைந்துகொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா தென்னிந்திய திரைப்படத்துக்குத் திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.