Sushin Shyam: `தொடக்கம் மாங்கல்யம்'- காதலியைக் கரம் பிடித்த இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம்
மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சுஷின் ஷ்யாம் தனது நீண்ட நாள் காதலியைக் கரம் பிடித்திருக்கிறார்.
சுஷின் ஷ்யாம் இசையில் சமீபத்தில் `போகைன்வில்லா' திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் குன்சக்கோ போபன், ஃபகத் ஃபாசில் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இதுமட்டுமல்ல, `மஞ்சும்மல் பாய்ஸ்', `ஆவேஷம்' போன்ற திரைப்படங்களின் மூலம் ஹிட் இசையையும் இந்தாண்டு இவர் கொடுத்திருந்தார். `போகைன்வில்லா' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், `இத்திரைப்படத்திற்குப் பிறகு இந்தாண்டு வேறு எந்த திரைப்படத்தையும் கமிட் செய்யவில்லை. கமிட் செய்யப்போவதுமில்லை. ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு அடுத்தாண்டு மீண்டும் களமிறங்குவேன்!' என கூறியிருந்தார்.
இவரின் இந்த அறிவிப்பு அப்போது மாலிவுட்டில் பேசு பொருளாகியது. இன்று இவருக்கும் இவருடைய நீண்ட நாள் காதலி உத்ரா கிருஷ்ணாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. உத்ரா கிருஷ்ணா மலையாள நடிகை பார்வதி ஜெயராமனின் உறவினராவார். சென்னையில் ஒரு முறை சுஷின் ஷ்யாமும் உத்ராவும் சந்திக்கும்போதுதான் காதல் மலர்ந்திருக்கிறது. உத்ராதான் தனது காதலை சுஷின் ஷ்யாமிடம் சொல்லியிருக்கிறார்.
`திருமணத்திற்காகதான் சுஷின் ஷ்யாம் சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டிருக்கிறார் போல...' என சுஷின் ஷ்யாமின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தத் திருமண நிகழ்வில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா உட்பட மாலிவுட் பிரபலங்கள் சிலர் பங்கேற்றிருக்கிறார்கள்.
வாழ்த்துகள் சுஷின் சேட்டா!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...