செய்திகள் :

SwaRail : அசத்தல் அப்டேட்; ஆல் இன் ஒன் செயலியை அறிமுகப்படுத்திய இந்தியன் ரயில்வே - சிறப்பம்சம் என்ன?

post image

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே , உலகிலுள்ள மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 கோடி பயணிகளை கையாளும் ரயில்வே துறை, சராசரியாக 35 கோடி டன் சரக்கு போக்குவரத்தையும் கையாள்கிறது. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில்வே துறையில் இதுவரையில் R -wallet , UTS போன்ற செயலிகளை தனித்தனியாக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பெருகிவரும் பயணிகளின் எண்ணிக்கை , வளந்துவரும் தொழில் நுட்பம் என எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு SwaRail என்ற செயலியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது . விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த செயலி தற்போது பீட்டா சோதனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. SwaRail ரயில்வே சேவைகளுக்கு ஒரு தடையற்ற நிரந்தர தீர்வு என்று பெருமையுடன் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு விரிவான ரயில் சேவைகளை வழங்கும் வகையில் பீட்டா சோதனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்ட இந்த SuperApp ஆனது, இந்திய ரயில்வேயின் அனைத்து பொதுப் பயன்பாடுகளையும் ஒருங்கிணைக்கிறது.

‘SwaRail’ SuperApp மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ,முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவுகள், பார்சல் மற்றும் சரக்கு விசாரணைகள் ,ரயில் மற்றும் PNR நிலை விசாரணைகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள் ,புகார் மேலாண்மைக்கான ரயில் மடாட் போன்ற பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .

தனிப்பட்ட ஒரு கடவு சொல்லை வைத்து உள்நுழைவதன் மூலம் அனைத்து சேவைகளையும் எளிதில் பெற முடியும். தற்போதைய பயன்பாட்டில் உள்ள ஐஆர்சிடிசி ரெயில்கனெக்ட், யுடிஎஸ் மொபைல் ஆப் போன்ற தனித்தனி செயலிகளில் உள்ள எல்லா பயன்பாடுகளும் இந்த ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .

ரயில்களின் வருகை , புறப்பாடு மற்றும் அட்டவணைகளை சரிபார்க்க , PNR விசாரணை, தொடர்புடைய ரயில் தகவல்களையும் இந்த செயலி மூலம் எளிதில் பெற முடியும் . தற்போதைய பயன்பாட்டில் உள்ள RailConnect அல்லது UTS போன்ற செயலிகள் பயன்படுத்தும் கடவுச்சொற்களை பயன்படுத்தி இந்தSuperApp உள்நுழையலாம்.

m-PIN அல்லது பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி எளிதாக செயலியை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை மட்டும் முன்பதிவு செய்ய விரும்பினால், இதுவரையில் IRCTC Rail Connect சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கே கிடைக்கும் வகையில் ‘SwaRail’ ஒரு சிறந்த செயலியாக இருக்கும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது ரயில்வே துறை.

தற்போதைய நிலையில் SwaRail பீட்டா சோதனையில் இருப்பதால், பயனாளிகள் தமது அனுபவங்களையும் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கும், அதனடிப்படையில் மேலும் செயலியை மேம்படுத்துவதற்கும் இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது.

RailConnect அல்லது UTS ஐப் பயன்படுத்தும் பயனாளர்களின் கூடுதல் பலன் கருதி ஒற்றை உள்நுழைவு அம்சம் பல கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்கும் தேவையை குறைக்கிறது.

ஏற்கனவே உள்ள உள்நுழைவில், டிக்கெட் முன்பதிவுகளை எளிதாக்க ஒவ்வொரு பயனருக்கும் R-Wallet உருவாக்கப்பட்டது. மொபைல் பயன்பாட்டில் UTS இலிருந்து ஏற்கனவே உள்ள R-Walletகள் தானாகவே இணைக்கப்படும். m-PIN ஐப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான உள்நுழைவு விருப்பத்தையும் இந்த செயலி வழங்குகிறது. .

எப்படியோ.. செயலியை எளிதாக்குவதோடு இல்லாமல் .. பயணிகளின் பயணத்தையும் எளிதாக்கினால் பயணிகள் மேலும் ரயில்வே துறையை நாடி செல்வார்கள்

Jio Hotstar: `இனி ஐ.பி.எல் பார்க்க சந்தா கட்டணும்' உதயமாகும் ஜியோ ஹாட்ஸ்டார்! -என்னென்ன மாற்றங்கள்?

இந்தியாவில் ஓ.டி.டி-யை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா' ஓ.டி.டி தளமும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் ஒன்றிணையவிருக்கிறது என கடந்தாண்டே பேசப... மேலும் பார்க்க

Elon Musk Vs Open AI: ஓபன் AI நிறுவனத்தை விலைக்குக் கேட்கும் எலான்; களேபரமாகும் டெக் உலகம்!

ட்விட்டர் நிறுவனத்தை லாவகமாகக் கைப்பற்றிய எலான், தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையின் உச்சத்தில் இருக்கும் டெக் நிறுவனமான 'ஓபன் ஏஐ (Open Ai)' நிறுவனத்தை நோக்கி தன் வலையை வீசியிருக்கிறார்.பிரபல செயற்கை... மேலும் பார்க்க

Gadget: உங்கள் கேட்ஜட்களுக்கு வயதாகுமா... மொபைலின் ஆயுட்காலத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்!

மனிதர்களும், பிற உயிர்களும் வயதாகி இறந்துபோவது இயற்கை. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களுக்கும் இப்படி குறிப்பிட்ட ஆயுட்காலம் கிடையாது. என்றென்றைக்குமாக அல்லது நீண்டகாலம் உழைக்கும் பொருட்கள் பல... மேலும் பார்க்க

Modi : "இந்தியாவின் சொந்த ஏ.ஐ..." - AI மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதென்ன?

நேற்று பிரான்ஸில் நடந்த உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஏஐ மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உருவாகிவருவதைக் குறிப்பிட்ட அவர், ஏஐ பற்றிய கவலைகளையும் அவற்றை நிவர்த்தி ச... மேலும் பார்க்க

deepseek: 'நிதி நிறுவனம் டு ஏ.ஐ' - யார் இந்த டீப் சீக் நிறுவனர் லியாங் வென்ஃபெங்?!

டீப் சீக் சாட்பாட் - ஏ.ஐ உலகத்தின் புதிய வரவு. 'எப்போது என்ன சொல்வார்... செய்வார்' என்று உலக நாடுகளை ஜெர்க்கில் வைத்திருக்கும் ட்ரம்பிற்கே இந்த வரவு ஒரு ஜெர்க்கைத் தந்துள்ளது.கடந்த சில நாட்களாக, டீப் ... மேலும் பார்க்க

இன்போசிஸ் துணை நிறுவனர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு! - விவரம் என்ன?

இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.போவி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் சன்னா ... மேலும் பார்க்க