செய்திகள் :

TASMAC: "கூடுதல் பணம் கேட்டு அதிகாரிகள் டார்ச்சர்" - வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற ஊழியர்

post image

திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன்.

இவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், விஷம் அருந்திய நிலையில் பாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு சில டாஸ்மாக் அதிகாரிகளைக் குறிப்பிட்டும், காவல்துறையைச் சேர்ந்த சிலரைக் குறிப்பிட்டும், அவர்கள் தன்னிடம் பணம் வாங்குவதாகவும், அப்படிப் பணத்தைக் கொடுத்தாலும் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற பாலகிருஷ்ணன்
தற்கொலைக்கு முயன்ற பாலகிருஷ்ணன்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதால், இது குறித்து தில்லைநகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாஸ்மாக் ஊழியர் ஒருவர் அதிகாரிகளும், போலீஸாரும் கூடுதல் பணம் கேட்டு தன்னிடம் டார்ச்சர் செய்ததாக குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுவிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கிராமத்தையே மிரட்டிய போதை கும்பல்; புகாரளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் - இளைஞன் கொலையில் பகீர் பின்னணி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகிலுள்ள மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் கடந்த 19-ம் தேதி தங்களின் கிராமத்து சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.. மானாமதுரை பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தீ அணைக்கும் பணிமானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 - ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்கும... மேலும் பார்க்க

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின்... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடம... மேலும் பார்க்க

Doctor Death: சிறையிலிருந்து தப்பிய சீரியல் கில்லர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கைது!

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேர... மேலும் பார்க்க