Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனலாக பேசிய பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவான 'தலைவன் தலைவி' படம் நேற்று (ஜுலை 25) திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகி இருக்கிறது. எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. ஆடியன்ஸும் படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
‘ஒரு கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு பிறகு இந்தப் படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் அழைத்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் படக்குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

படத்தைப் பார்க்காதவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கை இந்தப் படத்தோடு கனெக்ட் ஆகும். 2 மணி நேரம் ஜாலியாக நீங்கள் சிரிக்கக்கூடிய ஒரு படமாக இருக்கும். என்ஜாய் பண்ணி பாருங்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...