செய்திகள் :

The Boys: 'மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு' - க்ரேவ்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பாய்ஸ் தொடர் நடிகை

post image

பிரபல ஹாலிவுட் நடிகை எரின் மொரியார்ட்டி (Erin Moriarty) தனக்கு க்ரேவ்ஸ் (Graves) என்ற நோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாகவும், அனைவரையும் அந்த நோய் குறித்து பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எரின் மொரியார்ட்டி.

Erin Moriarty
Erin Moriarty

அதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நான்கு சீசன்களாக வெளிவந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் 'தி பாய்ஸ் (The Boys)' தொடரின் நாயகியாக நடித்து உலகெங்கிலும் பிரபலமானவர்.

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir)' திரைப்படத்தின் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் க்ரேவ்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். க்ரேவ்ஸ் நோய் என்பது தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறு ஆகும்.

இந்த நோயினால் உடலில் தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கலாம், இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கலாம், உடல் எடை குறையலாம், மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகள் உருவாகலாம்.

Erin Moriarty
Erin Moriarty

இந்த நோய் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள எரின் மொரியார்ட்டி, "எனது அனுபவம் உங்களது அனுபவத்தில் இருந்து மாறுபடலாம். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இல்லாமல் இருந்திருந்தால், நான் முன்பே இதை கண்டறிந்திருப்பேன்.

உங்களுக்கு சிறிய அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்து கொள்ளுங்கள்," என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Vijay: `நாளைய தீர்ப்பு முதல் தமிழக வெற்றிக் கழகம் வரை' - பிறந்தநாள் நாயகன் விஜய் பற்றிய Quiz!

இன்று (ஜூன் 22) பிறந்தநாள் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்க்கு, நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை, விஜய் மக்கள் இயக்கம் முதல் தமிழக வெற்றிக் கழகம் வரை… ஒரு நெடும் பயணம் தான். நடிகரும் த.வெ.க தலைவருமா... மேலும் பார்க்க

'ரஜினி சார், சிவகார்த்திகேயன் அண்ணா எங்க படங்களுக்கும் ஆதரவு கொடுங்க'- திருநங்கை ஜீவா சுப்ரமணியம்

இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், '96' படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'குட் டே' ( Good Day).காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுக... மேலும் பார்க்க

Retro: "நிறைய வெறுப்புகள், அஜெண்டாக்கள்... `ரெட்ரோ' ஒரு போரையே எதிர்கொண்டது" - கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் ஆகியோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1-ம் தேதி `ரெட்ரோ' திரைப்படம் வெளியானது.ரசிகர்களின் பெரும் எதிர... மேலும் பார்க்க

Manisha Koirala: "பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை!" - மனிஷா கொய்ரலா

மனிஷா கொய்ரலா 'பாம்பே', 'இந்தியன்', 'முதல்வன்', 'ஆளவந்தான்', 'பாபா' ஆகிய முக்கியமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் தமிழில் கடைசியாக தனுஷின் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்... மேலும் பார்க்க

'விஜய் மல்லையாவின் வீடியோவைப் பார்த்துதான்..!' - இயக்குநர் ராஜு முருகன் பேசியது என்ன?

இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், '96' படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'குட் டே' ( Good Day). காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடு... மேலும் பார்க்க