செய்திகள் :

Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' - ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!

post image
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு, 'இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை, முடிச்சும் இல்லை!' என திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.
ஆதவ்

திருமாவளவன் பேசுகையில், 'ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

களத்தில் எவ்வளவு முரண்பட்டாலும் அதை பகையாக நினைக்கக்கூடாது. சில பேர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் தலைமையின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆதவ் அப்படியெல்லாம் செய்யவில்லை. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக தவெக இருக்கிறது. விசிக பேசும் அதே கொள்கைகளை தவெகவும் பேசுகிறது.

திருமா

இதனால் நான் மனப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன் எனும் விளக்கத்தை ஆதவ் தந்தார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தவெக சார்பில் பெரியாரின் கொள்கைகளைத்தான் உயர்த்திப் பிடிப்போம் என ஆதவ் சொன்னார். எங்களுக்கு எந்த அரசியல் கணக்கும் இல்லை. முடிச்சும் இல்லை.' என்றார்.

கோவை: வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு - கையும் களவுமாக சிக்கிய 2 பெண்களின் பகீர் பின்னணி

கோவை மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்ட இளைஞர்கள் தொடங்கி காவல்துறை அதிகாரி வரை பலர் இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ச... மேலும் பார்க்க

`சீமானைச் சமாளிப்பதெல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி..!' - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

மார்ச் ஒன்றாம் தேதியான நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகி... மேலும் பார்க்க

`பிற மொழிகளைக் கற்கும் போதுதான் வருங்காலம் சிறக்கும்!' - பிரேமலதா

கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் ரிசார்ட் தொடக்க விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``டெல்டா பகுதி விவசாயிகள் வாழ்ந்தால்தான் தமிழ்நாடு வாழ்ந்ததாக வ... மேலும் பார்க்க