Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நாங்கள் (நானும் என் கணவரும்) ஜப்பான் சென்றிருந்தோம். ஜப்பானில் இறங்கியதிலிருந்து திரும்பி வரும் வரைக்கும் அதிசயம் அதிசயம்தான்.
பார்த்துப் பார்த்துப் பிரமித்துப் போனோம். அதில் ஒன்றுதான் இந்த எரிமலைப் பள்ளத்தாக்கு. நாங்கள் ஒரு எரிமலையின் மேல் நிற்கிறோம் என்ற உணர்வே எங்களைப் புல்லரிக்கச் செய்தது.
மலை ஏறும் பொழுதே கந்த வாசனை (அழுகிய முட்டை) வருகிறது. எனக்கு எங்கள் பள்ளியில் ரசாயன பரிசோதனைக் கூடம்தான் நினைவுக்கு வந்தது.

Owakudani எரிமலைக் குழம்பினால் ஆன ஒரு மலை. தற்பொழுது அருகில் செல்ல அனுமதி இல்லை. சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் ஒரு ஈரத் துணியை மூக்கில் போட்டுக் கொண்டு போக வேண்டும்.
Mount Hakoneல் 3000 வருடத்திற்கு முன் எரிமலை வெடித்ததின் விளைவு. அந்தப் பகுதி active volcanic zone ஆக sulfurous fumes, hot springs and hot rivers ஆல் நிறைந்து இருக்கிறது.
வானம் தெளிவாக இருந்தால் Mt.fuji-ஐ அங்கிருந்து பார்க்கலாம்
Owakudani Stationலிருந்து smells, sights, and sounds மூன்றையும் Hakone ropeway ல் போகும் பொழுது உணர முடியும்.
நம்முடைய காலுக்குக் கீழ் நிறைந்து இருக்கும் எரிமலைப் பகுதியை உணர முடியும். உள்ளே அழுத்தம் அதிகமாகும் பொழுது அது வெடித்து வெளியே வருகிறது.
இது மருத்துவக் குணம் உடையதால் மருத்துவக் கம்பெனிகள் உபயோகப்படுத்திக்கொள்கின்றன.
BLACK EGG: அங்கு வெந்நீர் ஊற்றுக்களும் இருக்கின்றன.

Kuro-tamago என்ற chicken eggs-ஐ இந்த தண்ணீரில் வேக வைத்து உண்கிறார்கள். இது சாதாரண முட்டைதான். ஆனால் வெந்த உடன் தோல் மட்டும் கருப்பாகி விடும்.
ஒரு முட்டை சாப்பிட்டால் 7 வருட ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. பண்ணாவிட்டால் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
The sulphur-ம் , iron in the water-ம் தான் இந்த நிறத்தைக் கொண்டு வருகின்றன. சாதாரண முட்டைதான். smell-ம் taste-ம் தான் கொஞ்சம் வித்தியாசம். வித்தியாசமான அனுபவம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.