செய்திகள் :

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

post image

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.

அமெரிக்க வரலாற்றில் ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அதிபராக வெற்றிபெற்ற இரண்டாவது நபர் ட்ரம்ப். முந்தைய ஜனநாயககட்சி, குடியரசுக்கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து... ஏன் முந்தைய ட்ரம்ப்பின் அணுகுமுறையில் இருந்தே மாறுபட்ட விதத்தில் இந்த ஆட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trump

எப்போதும் அமெரிக்கா உலகுக்கு வழிகாட்டும் வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அதிபர்களிடமிருந்து வேறுபட்டு, "அமெரிக்காவை வளரும் நாடாகவேப் பார்க்கிறேன்" எனக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்துக்காக பல மில்லியன் டாலர்கள் செலவு செய்த எலான் மஸ்க் அவரது வருகையை "The Return of the King" எனக் கொண்டாடுகிறார். தீவிர வலதுசாரிகளும் முதலாளிகளும் எதிர்பார்த்த அமெரிக்கா உருவாகவிருக்கிறது. இதன் முதற்படியாக இன்றே பல அதிர்ச்சி தரும் ஆணைகளை பிறப்பித்துள்ளார் ட்ரம்ப்.

Trump 2.0

  • திருநங்கைகள் பாதுகாப்பு சட்டங்களை நீக்கி, அமெரிக்க அரசு ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார்.

  • மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா (Gulf of America) எனப் பெயர் மாற்றியுள்ளார்.

  • அதேப்போல அலாஸ்காவின் 2000 அடி டெனலி மலைக்கு மெக்கென்லி மலை என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டியுள்ளார். (2015ம் ஆண்டு அதிபர் ஒபாமா டெனலி மலை எனப் பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.)

Trump
  • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பெற்றோர் எந்த நாட்டவராக இருந்தாலும் குழந்தை அமெரிக்க மண்ணில் பிறந்தால் அதற்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் முறையை மாற்றுவதாக உறுதிபூண்டுள்ளார்.

  • அடுத்த 90 நாள்களுக்கு அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவி திட்டங்களையும் நீக்கியுள்ளார். அனைத்து திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும் உலக வெப்பநிலையை குறைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்.

  • எல்லைப்புறத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மெக்சிகோவிலிருந்து எல்லை வழியாக மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைகளில் இராணுவத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்.

  • உலக சுகாராத அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா WHO-க்கு பெரிய அளவில் நிதியுதவி செய்தபோதும் கோவிட் முதலான பெருந்தொற்று நேரத்தில் WHO சரியாக செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

  • எரிபொருள் அவசரநிலையை அறிவித்திருக்கிறார். கச்சா எண்ணெய் எடுப்பதை அதிகரிக்க உத்தரவிட்டதோடு, பைடனின் மின்சார வாகன ஆணையைத் திரும்பப் பெற்றுள்ளார். அலாஸ்காவில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த முந்தைய பைடன் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார்.

Biden-Kamala
  • பிப்ரவரி 1 முதல் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு 25% இறக்குமதி கட்டண உயர்வு செய்யவும் சீன பொருள்களுக்கான இறக்கு மதி கட்டணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறியுள்ளார்.

  • உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார்.

  • டிக்டாக் செயலியை தடை செய்வதை 75 நாட்கள் தள்ளி வைத்துள்ளார்.

  • கடந்த 29ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்ததால் ட்ரம்ப் பதவியேற்பு நாளில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டது. இதனால் கோபமான அவர் இனி அனைத்து அதிபர் பதவியேற்பு நாளிலும் கொடி உச்சியில் பறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • அமெரிக்காவில் புகலிட கோரிக்கை வைத்துள்ளவர்கள், உத்தரவு வரும்வரை மெக்சிகோவிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளார்.

  • பைடன் ஆட்சி காலத்தில் 1 மில்லியன் வெளிநாட்டவர்கள் சட்டப்பூர்வமாக குடியேற வாய்ப்பு வழங்கிய CBP One செயலியை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

  • இராணுவம் மற்றும் சிறப்பு அரசுத் துறைகள் தவிர, பிறத் துறைகளில் அரசு வேலைவாய்ப்பை நிறுத்தி வைத்துள்ளார்.

  • அரசின் செலவீனங்களைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்க அரசு திறன் துறைக்கு (Department of Government Efficiency) பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளார். இந்த துறை தொழிலதிபர் எலான் மஸ்கால் வழிநடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Elon musk
  • 2021 ஜனவரி 6ம் தேதி தலைநகரில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய 1500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

  • பைடன் காலத்தில் அரசியல் எதிரிகளாக கருதப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.

  • அரசு அதிகாரிகள், ஏஜெண்ட்கள் மற்றும் ஊழியர்கள் அமெரிக்க மக்களின் பேச்சு சுதந்திரத்தில் சட்டத்துக்குபுறம்பாக தலையிடுவதை தடைசெய்யும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

  • அரசு வழக்கறிஞர் பைடன் காலத்தில் பேச்சு சுதந்திரத்து எதிரான வன்முறைகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

  • போதைப்பொருள் விநியோக குழுக்களை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார்.

`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரிக்குடிசை கிராமத்தில் 'கள் விடுதலை மாநாடு' நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? - காரணம் என்ன?

குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமியும் அதிபர... மேலும் பார்க்க

Doctor Vikatan: 4 கிலோ எடையில் பிறந்த குழந்தை... பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வருமா?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை 4 கிலோ எடையில் பிறந்தது. இது நார்மல் எடைதானா... குழந்தைகள் அதிக எடையில் பிறப்பது ஏன்... இதனால் பிற்காலத்தில் அவர்கள் உடல் பருமன் பிரச்னை... மேலும் பார்க்க

``காலாவதி பதவியும், விலகல் கடிதமும்'' -வேலூரில் பாஜக மோதல்... பின்னணி என்ன?

பா.ஜ.க-வில், வேலூர் மாவட்டத்திற்கான புதிய தலைவராக தசரதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இதற்கான அறிவிப்பை மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி நேற்று மாலை வெளியிட்டார். இதனிடையே, தசரதன் நியமனத்திற்க... மேலும் பார்க்க

IIT இயக்குநர் சர்ச்சை கருத்து: ``கல்வி நிலையங்கள் காவி மயமாகுவதை..." -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை!

மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம... மேலும் பார்க்க

Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..!

'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று ஆரம்பித்து 'மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்' என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது. இது 170 மில்லியன் அமெ... மேலும் பார்க்க