செய்திகள் :

TVK மதுரை மாநாடு: ``சிங்கம் வேட்டையாடத்தான் வெளியே வரும் வேடிக்கை பார்க்க வராது" - தவெக விஜய்

post image

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

மாநாட்டில் தவெக தலைவர் விஜய்
மாநாட்டில் தவெக தலைவர் விஜய்

இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய விஜய், ``ஒரு சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்கலாம் வெளியே வராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கக்கூடிய மிருகத்தைத்தான் வேட்டையாடும். அதைவிட பெரிசா இருக்கும் மிருகத்தைத்தான் வேட்டையாடும், ஜெயிக்கும்.

எவ்வளவு பசியில இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதைத் தொட்டு கூட பார்க்காது. அப்படிப்பட்ட அந்தச் சிங்கம் அவ்வளவு எளிதா எதையும் தொடாது. அப்படி தொட்டா அதை விடாது. காட்டுல நாலு பக்கமும் தன்னுடைய எல்லையைத் தானே வரையறுத்து, தன் காட்டை ஆட்சி செய்யும்.

தன்னுடைய கண்ட்ரோல்ல வச்சுக்கும். சிங்கத்துக்குக் கூட்டத்தோடவும் இருக்கத் தெரியும், தனியா இருக்கவும் தெரியும். தனியா வரணும்னு நினைச்சாலும் அஞ்சாமல், சும்மா கெத்தா, தனியாக வந்த அத்தனைப் பேருக்கும் தண்ணிக் காட்டும். எப்பவும் எதுலயும் தன்னுடைய தனித்தன்மையை இழக்காது.

மாநாட்டில் தவெக தலைவர் விஜய்
மாநாட்டில் தவெக தலைவர் விஜய்

வீரம் விளையும் மதுரை மண்ணை வணங்குகிறேன். மதுரைனு சொன்னவுடன் யாருக்கும் அடங்காத காளைகள் இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நம்ம வைகை ஆறு, அழகர் ஆற்றில் இறங்குற வைபவம், மதுரை மீனாட்சி அம்மன் தான் ஞாபகத்துக்கு வரும். இந்த மண்ணின் மக்களும் உணர்வுபூர்வமாக வாழக் கூடியவர்கள். இந்த மண்ணுல கால் வைத்த உடனே மனசுல ஓடிட்டே இருந்தது, சினிமா, அரசியல்னு எதுனாலும் நமக்கு ரொம்ப பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோட பழகுறதுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே. அவரை மறக்க முடியுமா? தமிழ்நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாக, உண்மையுடன் நிற்பவர்கள். அதற்கு மிகப்பெரிய அடையாளம்தான் இந்த மதுரை மண்.

மாநாட்டில் தவெக தலைவர் விஜய்
மாநாட்டில் தவெக தலைவர் விஜய்

நம்முடைய தமிழக வெற்றிக் கழக அரசியலும் அப்படித்தான். உண்மையான அரசியல், உணர்வுபூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லவர்களுக்கான அரசியல், நாட்டு மக்களுக்கான அரசியல், நல்லது மட்டுமே செய்யக்கூடிய அரசியல். 1967 - 1977 வருசத்துல நடந்த ஆட்சி மாற்றம் நடந்த மாதிரி அடுத்த வருஷம் 2026-ல அப்படி ஒரு வரலாறு திரும்ப போகுது. அதை உறுதிப்படுத்தும் மாநாடுதான் இது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Vijay Kutty Story: "அந்த 9 திருட்டுப்பயலுகளும் என்ன பண்ணாங்கனா..." - மாநாட்டில் விஜய் குட்டிக் கதை

தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ந... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "காமராஜரைத் தோற்கடித்தது சினிமாகாரர்கள் அல்ல; அரசியல்வாதிகள்தான்" - விஜய் பேச்சு

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: ``Stalin Uncle... Its Very Wrong Uncle" - மாநாட்டில் விஜய் பேச்சு

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "தவெக யாருடன் கூட்டணி என்ற கேள்விகள் வரும்; அதற்கு..." - சஸ்பென்ஸ் வைத்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ந... மேலும் பார்க்க

'நீங்கள் சொல்லித்தானே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கினோம்' - அமெரிக்காவை சாடும் ஜெய்சங்கர்!

இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம். இதற்கான பதிலடியைத் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தந்துள்ளார். அவ... மேலும் பார்க்க