செய்திகள் :

``TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்'' -காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

மாணிக்கம் தாகூர்

மேலும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்,

"புதிய ஜி.எஸ்.டி 2.0 மூலம் நாட்டு மக்களுக்கு 2 லட்சம் கோடி பணம் மிச்சம் ஆகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு,

“ஒவ்வொரு இந்தியருக்கும் புதிய ஜிஎஸ்டி 2.0 மூலம் மாதம் 137 ரூபாய் மிச்சமாகும். பணக்காரர்கள் மட்டும் பயன்படக்கூடிய விஷயங்களுக்கு மட்டும் தான் புதிய ஜி.எஸ்.டி 2.0 மூலம் நன்மை கிடைக்கும். ஏழைகளுக்கு அல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், "ஜி.எஸ்.டி வரி குறைப்பின் மூலம் நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா கூறுவது பொய். ஜி.எஸ்.டி வரி குறைப்பின் மூலம் எந்தப் புரட்சியும் இல்லை," என்றார்.

`அடுத்த எதிர்க்கட்சித் தலைவர்'

மேலும் தொடர்ந்து பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர், "அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தைப் பெரிய எதிர்க்கட்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ-யைத் தங்களுடைய கூட்டணி கட்சிகள் மீது அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

TVK Vijay | விஜய்
TVK Vijay | விஜய்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிளாக் மெயில் பாலிடிக்ஸ் எடுபடாது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடன் கட்சியில் இருப்பவர்களைத் துரோகி எனக் கூறி வெளியேற்றி வருகிறார்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கீழ் இயங்கும் அ.தி.மு.க தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கக்கூட அந்தஸ்து இல்லாத கட்சியாக மாறி வருகிறது.

அந்த இடத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்.

2080 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது என்பது துரோகம்.

ஏழைப் பள்ளி மாணவர்களைத் தண்டிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்திற்குத் தரவேண்டிய கல்வி நிதியைத் தர மறுக்கும் பாஜகவிற்குத் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

மாணிக்கம் தாகூர்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு சேர்ந்து இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து வெற்றி பெறும் கூட்டணியை விட்டுவிட்டு யாராவது ஒருவர் புதிதாக உருவாக உள்ள கூட்டணிக்குச் செல்வார்களா?

காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி விஜயுடன் கூட்டணி சேரப் போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் அமித்ஷா செய்யும் சதி” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

நாமக்கல் - குமாரபாளையம்: எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணத் தேதி மாற்றம் - காரணம் இதுதான்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.120 சட்டமன்ற தொகுதிகளை கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

TVK Vijay: நாகை வந்தடைந்த தவெக தலைவர் விஜய்; உற்சாகத்தில் தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 11 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் ... மேலும் பார்க்க

TVK Vijay: நாகை வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 11 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் ... மேலும் பார்க்க

Vijay TVK: பல்வேறு நிபந்தனைகளுடன் நாகை, திருவாரூரில் இன்று விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 10 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் ... மேலும் பார்க்க

``அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வர... மேலும் பார்க்க

PMK: "தேர்தல் ஆணையக் கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை; பாலு சொன்னது பொய்" - கொதிக்கும் எம்எல்ஏ அருள்

அன்புமணி தலைமையிலான பா.ம.க-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பொய்யான தகவலைக் கூறியுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த கடிதத்தில் மாநில... மேலும் பார்க்க