செய்திகள் :

நாமக்கல் - குமாரபாளையம்: எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணத் தேதி மாற்றம் - காரணம் இதுதான்

post image

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

120 சட்டமன்ற தொகுதிகளை கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளையும், தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாததை பட்டியலிட்டும் பேசி வருகிறார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 18.09.2025, 19.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

சில காரணங்களினால் சுற்றுப்பயணம் தேதி 19.09.2025, 20.09.2025 மற்றும் 21.09.2025 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால்,

நாளை (20.09.2025) நடைபெற இருந்த நாமக்கல், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரம் மற்றும் நாளை மறுநாள் (21.09.2025) நடைபெற இருந்த திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கான பிரச்சார பயணம்,

04.10.2025 அன்று நாமக்கல், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிகளிலும், 05.10.2025 அன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TVK Vijay: நாகை வந்தடைந்த தவெக தலைவர் விஜய்; உற்சாகத்தில் தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 11 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் ... மேலும் பார்க்க

TVK Vijay: நாகை வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 11 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் ... மேலும் பார்க்க

Vijay TVK: பல்வேறு நிபந்தனைகளுடன் நாகை, திருவாரூரில் இன்று விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 10 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் ... மேலும் பார்க்க

``அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வர... மேலும் பார்க்க

PMK: "தேர்தல் ஆணையக் கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை; பாலு சொன்னது பொய்" - கொதிக்கும் எம்எல்ஏ அருள்

அன்புமணி தலைமையிலான பா.ம.க-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பொய்யான தகவலைக் கூறியுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த கடிதத்தில் மாநில... மேலும் பார்க்க

``புதிய கட்சிகளை அடக்க நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதிகமாகும்; குறையாது'' - டாக்டர் கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற 24-ம் தேதி இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் க... மேலும் பார்க்க