செய்திகள் :

TVK: ``2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா

post image
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், '1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை போல 2026 -ல் தவெக பண்ணையார் மனநிலையை ஒழிக்கும்.' எனக் கூறியிருக்கிறார்.
ஆதவ் அர்ஜூனா

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாவது, 'இந்தியாவில் தேசியக் கட்சி ஒற்றை ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றிகண்டவர். இளைஞர் படையின் துணையோடு முதன்முதலாக மாநிலக் கட்சித் தலைமையிலான ஆட்சியை உருவாக்கியவர். மாநில சுயாட்சியின் நாயகர். இருமொழிக் கொள்கையின் சிற்பி. பண்ணையார் அரசியலை ஒழித்து, சாமானிய அரசியலை நிறுவிய மக்கள் தலைவர். இன்றுவரை, தமிழ்நாடு அரசியலின் திசைவழியாக இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றுவோம்.

1967-ம் ஆண்டு அண்ணா அடைந்த மகத்தான வெற்றி பண்ணையார் ஆதிக்கத்தைத் தகர்த்த அந்த வரலாற்று நிகழ்வைப் போல, இன்றைய பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை நம்மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2026-ம் ஆண்டு சாமானிய-எளிய மக்களுக்கான ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழகம் அளித்து புதிய வரலாற்றைப் படைக்கும்.

ஆதவ் - விஜய்

அண்ணாவின் அறிவுரையான “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி” என்கிற வழியில், நம் தலைவர் சுட்டிக்காட்டியது போல ‘மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்து’ ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்கான சூழல் இப்போது நமக்கு அமைந்துள்ளது. அண்ணாவின் நினைவுநாளில், அந்த சூளுரையையே நம் வெற்றிப் பயணத்திற்கான உறுதியாக ஏற்றுப் பயணிப்போம்!' எனக் கூறியிருக்கிறார்

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் மலை உரிமை சம்பந்தமாக இந்து முன்னணி பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைம... மேலும் பார்க்க

US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

அமெரிக்க அதிபர்களிலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர், ட்ரம்ப். தனது முந்தைய பதவி காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கடும் வரிகளை விதித்தார், அவர். பதிலுக்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற சிறப்பை பெறுகிறார்.மதுரை மாநகராட்சிபாரம்பரிய நகரமான மதுரை, நகரா... மேலும் பார்க்க

``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ்கோபி விளக்கம்

பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிகேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி-யான நடிகர் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராக உள்ளார். டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈட... மேலும் பார்க்க

``37,000 கி.மீ வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் தயாரிக்கிறோம்'' -ISRO தலைவர் நாராயணன் பெருமிதம்

இஸ்ரோ தலைவராக பொறுபெற்றுள்ள நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளையில் பாராட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நா... மேலும் பார்க்க

``புதுச்சேரி மின்துறை புதிய புதிய பெயர்களில் கொள்ளை அடிக்கிறது!'' -பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காட்டம்

புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சாமிநாதன் மின்துறையின் கட்டணக் கொள்ளையை கடுமையாக சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதுச்சேரி மாநி... மேலும் பார்க்க