இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்...
UP: "மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து வைங்க" - மின்கோபுரத்தில் ஏறிய நபர்; என்ன நடந்தது?
உத்தரப்பிரதேசத்தில் ராஜ் சக்சேனா என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், திருமணமாகி ஒரு வருடத்தில் அவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அவர் தனது முதல் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு மேல் இந்தத் திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், சக்சேனா தனது மனைவியின் மற்றொரு இளைய தங்கையைக் காதலித்து, அவரையும் திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.

தனது மனைவியிடம் இந்த விருப்பத்தைத் தெரிவித்தபோது, அவர் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சக்சேனா உயரமான மின்கோபுரத்தில் ஏறி, தனது மனைவியின் தங்கையைத் திருமணம் செய்ய வேண்டும் எனக் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு உடனே கூடியுள்ளனர்.
காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, சக்சேனாவைக் கீழே இறங்க வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.