F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
UPSC: 979 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு; எப்போது விண்ணப்பிக்கலாம்?
நடப்பு ஆண்டிற்கான UPSC தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் ஆட்சிப் பணிகளில் சேர UPSC நிர்வாகம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வில், IAS, IFS, IPS உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு முக்கியமானதாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, IAS, IFS, IPS பதவிகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சுமார் 979 காலி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மே 25 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
https://upsc.gov.in/content/important-notice-cse-and-ifos-examination-2025 என்ற இணைப்பில் தேர்வு தொடர்பான விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.