இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்க...
Vidaa Muyarchi: 'அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!'- அஜித் குறித்து ஆரவ்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில் இன்று (பிப்ரவரி 6) பிரமாண்டமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விடாமுயற்சி படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்த ஆரவ் அஜித் குறித்து பேசியிருக்கிறார்.
“ ‘விடாமுயற்சி’ படம் இன்று வெளியாகி இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்று எப்போதும் அஜித் சார் ஒன்றை சொல்லிக்கொண்டே இருப்பார். இந்த மாதிரியான ஒரு படம் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும் என்றும் சொன்னார்.
அஜித் சாரின் ஒரு ரசிகனான நான் இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அனைவரின் கடின உழைப்பையும் மக்கள் பார்ப்பார்கள். அஜித் சார் எப்போதும் ரசிகர்கள் பற்றி பேசுவார்.
![அஜித்துடன் ஆரவ்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/wwav0wns/GBTRts3bAAA0TJX.jpg)
ரசிகர்கள் மீது அக்கறை கொள்வார். அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரசிகர்களுக்கு எதாவது ஒரு மெசேஜை கொடுத்துகொண்டே இருக்கிறார். நேற்று சாரிடம் பேசினேன். அவர் வாழ்த்தை தெரிவித்தார்” என்று ஆரவ் நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...