செய்திகள் :

Viduthalai 2: ``ஃபைட் சீன்ல விலா எலும்பு உடைஞ்சிடுச்சு; அப்பா சொன்ன வார்த்தை..." - கென் கருணாஸ்

post image

'விடுதலை-2' வில் சில நிமிட காட்சிகளே வந்தாலும் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாப்பாத்திரத்துக்கே, வாத்தியாராக திரையரங்கை மிரட்டி; புரட்டி எடுத்த வலிமையான கதாப்பாத்திரம்தான் கருப்பன்.

'விடுதலை 1'-ல் மிரளவைத்தவர் சூரி. 'விடுதலை 2'-வில் விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக கருப்பனாக மிரளவைத்த சூரன்தான் கென் கருணாஸ். கருப்பனாக பவர்ஃபுல்லான கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்து பார்வையாளர்களை கட்டிப்போட்ட கென் கருணாஸிடம் பேசினோம்,

"'விடுதலை 2' வாழ்க்கைல ரொம்ப முக்கியமான படம். என் நடிப்புக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. படத்துல என்னோட காட்சிகள் பத்து நிமிடம்தான் வருது. நடிக்கும்போது கருப்பன் கேரக்டர் இவ்ளோ ஸ்ட்ராங்கானதுன்னு தெரியாது. ஆனா, படம் முடிஞ்சதுக்கப்புறமும் ரசிகர்கள் என்னை மனசுல வெச்சு பாராட்டுறது ஊக்கமா இருக்கு. எனக்கு கருப்பு நிறம்தான் ஃபேவரிட். அதுலயே, கேரக்டர் பேர் அமைஞ்சதுல சந்தோஷம்.

ken karunas

கருப்பன் பவர்ஃபுல்லான பேரு. நம்ம ஊருல இருக்க சாமியே கருப்பன்தான். அந்தப் பேரைத் தாங்கி நடிச்சதை பெரிய ஆசீர்வாதமா பார்க்கிறேன். சசிகுமார் சார், இயக்குநர் கிருஷ்ணா சார், 'சித்தா' பட இயக்குநர் அருண் அண்ணா எல்லோரும் போன் பண்ணி ’ரொம்ப நல்லா நடிச்சிருக்கே'-னு வாழ்த்தினாங்க. வெற்றிமாறன் சார்தான் என்னோட குரு. எல்லா கிரெடிட்டும் அவருக்குத்தான் சேரணும். அவரோட பெரிய ஃபேன் நான். சினிமாவை அப்படி நேசிக்கிறார். அதனால்தான், உலகத்தரமான படைப்புகளை கொடுக்கமுடியுது.

கருப்பன் கேரக்டர் பற்றி வெற்றிமாறன் சார் சொன்னப்போ, கொஞ்சம் வெய்ட் போட்டு வாட்ட சாட்டமா இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு. அதனால, டயட் எல்லாம் இருந்து தொடர்ச்சியா கார்டியோ எல்லாம் பண்ணி 15 நாள்லயே 3 கிலோ வெய்ட் ஏத்தினேன். ஆனா, இது எதுவுமே வெற்றிமாறன் சாருக்கு தெரியாது. ஷூட்டிங்ல கேமரா முன்னாடி போய் நின்னப்போ, 'என்னடா பெரிய மனுஷன் மாதிரி இருக்க’ன்னு கேட்டார்.

'படத்துக்காகத்தான் சார்' அப்படின்னதும் சந்தோஷமா ஓகேன்னார். அவர் ஓகே சொல்றதே பெரிய பாராட்டுத்தான். இப்போ, 'வெய்ட் எல்லாம் ஏத்தி கருப்பன் கேரக்டருக்கே வெய்ட்டேஜ் கொடுத்திருக்க'-னு எல்லோரும் கவனிச்சு பாராட்டுறாங்க. இந்த நேரத்துல என்னோட ஜிம் மாஸ்டருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்” என்று 'விடுதலை 2' வெற்றி பூரிப்புடன் பேசும் கென்னிடம் ஷூட்டிங்கில் நடந்த மறக்கமுடியாத அனுபவங்கள் குறித்து கேட்டோம்.

கென் கருணாஸ்

"படத்துல ஃபைட் சீன் நல்லா இருக்குன்னு பாராட்டுறதுக்கு காரணம், எல்லோரும் உண்மையா; உணர்வுப்பூர்வமா ஃபைட் பண்ணதாலதான். ஃபைட் பண்ணும்போது என்னோட விலா எலும்பு உடைஞ்சிடுச்சு. சார்ட்ட எதுவுமே சொல்லல. அந்த வலியோடவே நடிச்சு முடிச்சிடணும்னுதான் நினைச்சேன். ஆனா, ஃபைட் மாஸ்டருங்க கண்டுபிடிச்சிட்டாங்க. 'அவனுக்கு ஏதோ அடிப்பட்டிருக்கு. ஆனா, மறைக்கிறான்'-னு சார்ட்டயும் சொல்லிட்டாங்க. இந்த விஷயம் தெரிஞ்சதுமே ஹாஸ்பிட்டல் அனுப்பிட்டார். ரொம்ப கேரிங்கா நலம் விசாரிச்சுக்கிட்டே இருந்தார். நான் பழைய மாதிரி மீண்டுவர கிட்டத்தட்ட ஒருமாசம் ஆகிடுச்சு. எனக்கு முழுமையா சரியானபிறகுதான், மீதி சண்டைக் காட்சிகளை எடுத்தார்.

வெற்றிமாறன் சாராலதான், நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அவர், படங்கள்ல தொடர்ந்து நடிக்கிறது ரொம்ப பெருமையா இருக்கு. என்னை பாத்துக்கிற விதம், கொடுக்கிற கேரக்டர் எல்லாம் என் வாழ்க்கைல சந்தோஷமான விஷயங்களா பார்க்கிறேன். 'கருணாஸ் மகன் கென்' அப்படியில்லாம, ’இந்தப் பையன் கருணாஸ் பையனாமே’-னு ஆச்சர்யப்படுறமாதிரி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கார் வெற்றிமாறன் சார்.

அதேமாதிரி, விஜய் சேதுபதி சார்கூட நடிச்சது பேரனுபவம். எல்லோரையும் மனசுவிட்டு பாராட்டுவார். இப்படி பாராட்டுற குணம் எல்லோருக்கும் வந்துடாது. கோ-ஆர்ட்டிஸ்ட்டை ரொம்ப கம்ஃபர்டபிளா உணர வெப்பார். அற்புதமான மனிதர்" என்று நெகிழ்ச்சியுடன் பேசும் கென் அப்பா கருணாஸின் பாராட்டு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

அப்பா கருணாஸுடன் கென்

"ஃபைட் சீன்ஸ் எல்லாம் ’ரொம்ப சூப்பரா பண்ணிருக்கப்பா’ன்னு வாழ்த்தினார். அம்மாவும் ரொம்ப எதார்த்தமா நடிச்சிருக்கன்னு பாராட்டினாங்க. எனக்கு எலும்பு உடைஞ்சப்போ 'கவலைப்படாத தியேட்டர்ல உன்னோட காட்சிகளைப் பார்த்துட்டு எல்லோரும் கத்தும்போது வலியெல்லாம் மறந்துடும்'ன்னார் அப்பா. இப்போ, அவர் சொன்னதெல்லாம் நடந்துட்டிருக்கு.

என்னோட எல்லா வலியும் போய்டுச்சு. எல்லா படத்துலயுமே ஃபைட் சீன் ரொம்ப முக்கியம். எனக்கும் அப்படியொரு சீன் அமைஞ்சதுல பெரிய சந்தோஷம். இந்த நேரத்துல ஃபைட் மாஸ்டர் அண்ணன்களுக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்" என்பவரிடம் "எப்போ ஹீரோவா பார்க்கலாம்? நீங்க மிஸ் பண்ணின கேரக்டர் ஏதாவது இருக்கா?" என்றோம்

"கூடிய சீக்கிரமே ஹீரோவா பார்க்கலாம். அதுதான் என்னோட ஆசையும். எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ணனும்னு ஆசை. குறிப்பா, ஜாலியான ஒரு கேரக்டர் பண்ணனும். 'டூரிஸ்ட் ஃபேமிலி'ன்னு ஒரு படம் வரப்போகுது. அதுல சசிகுமார் சாரோட மகனா நான்தான் நடிக்கவேண்டி இருந்தது. ரொம்ப நல்ல இயக்குநர். நல்ல கதை. நல்ல கேரக்டர் கொடுத்தாங்க. சில சூழல்களால என்னால நடிக்கமுடியல. நிச்சயம் படம் வெற்றிபெறும். என் வாழ்த்துகள்" என்பவரிடம் "அசுரன், விடுதலை 2' என ஒடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து அப்பா என்ன சொன்னார்?" என்றோம்,

வெற்றிமாறன்

"சிதம்பரம், கருப்பன் ரெண்டுமே பெருசா பேசப்படுது. அப்பாவுக்கு நான் நடிக்கிறதுல சந்தோஷம்தான். கேரக்டர்தான் முக்கியம்னு சொல்வார். நானும் படத்துல என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கான்னுதான் பார்த்து நடிப்பேன்" என்கிறார் அழுத்தமாக.

Trisha: `மகனை இழந்தேன்; மீண்டுவர கொஞ்ச காலம் தேவைப்படும்' - செல்லப்பிராணியின் இறப்பு குறித்து த்ரிஷா

நடிகை த்ரிஷாவிற்குச் செல்லப் பிராணிகள் என்றால் உயிர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி ஸ்டோரியில் பகிர்வதுண்டு.சூட்டிங் ஸ்பாட், வெளிநாடு என எங்கு... மேலும் பார்க்க

Vijay : அலங்கு டிரெய்லர் பார்த்த விஜய் - வாழ்த்துப் பெற்ற அன்புமணி மகள் & பட டீம்!

'உறுமீன், பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருக்கும் மற்றொருப் படம் 'அலங்கு'. குணாநிதி காதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்... மேலும் பார்க்க

RETRO: `இனி காதல்... பரிசுத்த காதல்'- வெளியானது சூர்யா - கார்த்திக் சுப்புராஜின் 'சூர்யா 44' அப்டேட்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.ஒருபக்கம் 'சூர்யா 44' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் 'சூர்யா 45'க்கானபடப்பிடிப்பு பொள்ளாச்சி, கோ... மேலும் பார்க்க

PV Sindhu : பி.வி.சிந்துவின் திருமண நிகழ்ச்சி; மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் அஜித் - வைரலாகும் வீடியோ!

இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை வெள்ளியும், வெண்கலமும் வென்றவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்ற இவருக்கும், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறு... மேலும் பார்க்க

Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2. இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழ... மேலும் பார்க்க