செய்திகள் :

Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?

post image

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2.

இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழமாகப் பேசியிருக்கிறது. பல உண்மை சம்பவங்களின் சாயலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விடுதலை 2 (Viduthalai 2) திரைப்படம் சமூகத்தில் அரசியல் விவாதங்களை எழுப்பியிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் அந்தத் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

விடுதலை 2 படத்தில்...

அந்தவகையில் நடிகர் தனுஷ் விடுதலை 2 குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனுஷின் பதிவில், "விடுதலை 2 ராவான (Raw) பிடிப்புடன் ஈர்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது. முதல் ஷாட் முதல் கடைசி ஷாட் வரை படத்துடன் ஒன்றியிருந்தேன். தலைசிறந்த படைப்பாளர் (Master Maker) வெற்றிமாறனின் மிகச்சிறந்த வேலைப்பாடு. இளையராஜா சாரின் இசையை ரசித்தேன். அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காகப் எல்ரெட் குமாருக்கு வாழ்த்துகள். படக்குழுவினருக்கு என் அன்பைப் பகிர்கிறேன்." எனக் குறிப்பிடிருந்தார்.

தனுஷின் பதிவு

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணை ரசிகர்களிடம் மிகுந்த ஆராவரத்தை எழுப்பிய கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வட சென்னை என இவர்கள் இருவரும் இணைந்து மிகச் சிறந்த படங்களைக் கொடுத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாக ரசிகர்கள் வட சென்னை 2 திரைப்படம் குறித்து தங்களது ஆர்வத்தை எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

Viduthalai 2: ``12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!'' - ஜெய்வந்த்

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடுதலை பாகம் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.படத்தின் இண்டர்வெல் காட்சியில் வாத்தியார் பண்ணையார்களில் ஒருவரை வெட்டி... மேலும் பார்க்க

Viduthalai 2: `படத்தை கலை வடிவமாக பாருங்கள்!' - அர்ஜூன் சம்பத்துக்கு பதில் கொடுத்த பி.சி ஶ்ரீராம்!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற `விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இத்திரைப்படம் தொடர்பாக இந்து மக்கள் மக்கள... மேலும் பார்க்க

Viduthalai 2: `அந்த வசனத்தை யாரையும் மனதில் வைத்து வெற்றிமாறன் சொல்லவில்லை’ - தொல்.திருமாவளவன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'விடுதலை- 2' கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற... மேலும் பார்க்க