செய்திகள் :

Vikatan: சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் பிரமாண்ட மேடை | விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025

post image

நம்பிக்கை விருதுகள், சினிமா விருதுகள் மூலம் சாமானிய மக்களையும் கலைஞர்களையும் அங்கீகரிக்கும் ஆனந்த விகடன் முதல் முறையாக 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025' மூலம் சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்க இருக்கிறது.

25 விருதுகள்... 200+ பரிந்துரைகள்... இணைய உலகின் திறமையாளர்களுக்கான அங்கீகாரம் - தமிழ் இணைய உலகின் நட்சத்திரங்கள், தமிழ்த் திரையுலகின், சின்னத்திரையின் கலைஞர்கள் ஒன்றுகூடும் மகத்தான விழா வரும் செப்டம்பர், 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 4 மணி முதல் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'
'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'

இந்த விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025 நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து 2025-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்க வேண்டும்.

அப்படியே விகடன் டிஜிட்டல் விருதுகள் குறித்து ஓர் அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்ய வேண்டும்.

வெற்றியாளர்கள் குறித்த உங்களின் கணிப்பும், விகடன் தேர்வுக் குழுவின் தேர்வும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்குக் காத்திருக்கிறது விருது நிகழ்ச்சிக்கான முன்வரிசை டிக்கெட். இந்த வருடத்துக்கான பரிந்துரைகள் இதோ!

Terms and conditions

இது அதிர்ஷ்டப் போட்டி அல்ல. சரியான நபர்களைக் கணித்து, சிறப்பான ஸ்லோகனையும் சொல்லும் 150 பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். விருது விழாவுக்கும் அழைக்கப்படுவார்கள்.

ஒரு வெற்றியாளருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே!

விகடன் குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இப்போட்டியில் பங்கேற்க இயலாது.

'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'
'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'

சென்னையில் நடக்கும் விழாவுக்கான இலவச டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். போக்குவரத்து செலவுகளையோ, பிற செலவுகளையோ விகடன் நிர்வாகம் ஏற்காது.

ஆன்லைனில் மட்டுமே உங்களின் பதில்களைப் பதிவுசெய்ய முடியும்.

போட்டியில் விகடன் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.!

https://awards.vikatan.com/digital-awards/