Vikatan Digital Awards 2025: `பொருளாதாரப் புலி - Finance With Harish' - Best Finance Channel Winner
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Finance Channel
இப்பிரிவில் Info Mindset, Finance Boosan, Boss Wallah (Tamil), Trade Achievers, பட்ஜெட் பத்மநாபன், அரவிந் சூரியா|தமிழ் பைனான்ஸ், பைனான்ஸ் வித் ஹரீஷ் ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, `பைனான்ஸ் வித் ஹரீஷ் சேனல்!

Best Finance Channel - Finance with Harish
கனிவான முகம், நட்பான புன்னகை, தெளிவான வார்த்தைகள் இவைதான் ஹரீஷின் அடையாளம்! பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், பென்ஷன் திட்டம் எனத் தனிமனித முதலீடுகள் தொடங்கி, மத்திய அரசின் பட்ஜெட் வரை அனைத்தையும் அறுவை சிகிச்சை செய்யும் `பொருளாதார' வைத்தியர்!

ஒரு நிமிட ரீல்ஸால் கூட, நம் பொருளாதார எதிர்காலத்தை வளமாக்க வைக்கும் வல்லமைகொண்ட Finance with Harish சேனலுக்கு Best Finance Channel விருதினை அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது விகடன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...