போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுச...
Vikraman: 'அன்னைக்கு இரவு நடந்தது இதுதான், தேவையில்லாமல்...' - பிக்பாஸ் விக்ரமன் மனைவி கூறுவதென்ன?
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விக்ரமன் பெயர் புதிய சர்ச்சையில் ஒன்றில் பேசப்படுகிறது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த விக்ரமன், பெண் வேடமணிந்து ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாக சர்ச்சைக் கிளம்பி இருக்கிறது. மேலும் அவர் பெண் வேடமணிந்திருந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இதுதொடர்பாக விக்ரமன் தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்திருந்தார். "சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
`அவர்கள் செய்ததுதான் சமூக குற்றம்’
இந்நிலையில் விக்ரமனின் மனைவி இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " நாங்கள் முன்பு தங்கியிருந்த குடியிருப்பில் ஷூட் சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்க வேண்டியிருந்தது. நான் வெளியூரில் இருந்தப்போது எடுத்த வீடியோ அது. நான் படம் ஒன்று எடுக்கிறேன். அதில் நடிப்பதற்காகத்தான் அவரை இதுபோன்ற வீடியாவை எடுத்துதரச் சொன்னேன்.

ஆனால் அந்த வேடத்தில் அவரைப் பார்த்தவர்கள் திருங்கை என்று நினைத்துக் கொண்டு இவரைத் தாக்கி விட்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் செய்ததுதான் சமூக குற்றம். அவர்கள் மீதுதான் தவறு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது சம்பந்தமே இல்லாமல் பிரச்னையாக மாற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோவை தேவையில்லாமல் பகிர்ந்து அவதூறு பரப்பி இருக்கிறார்கள். அது தொடர்பாக புகார் அளிக்கத்தான் காவல்நிலையம் வந்திருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs