யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!
What to watch - Theatre & OTT: அந்த ஏழு நாட்கள், Right, Balti, Karam; இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
அந்த ஏழு நாட்கள் (தமிழ்)

நடிகர்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீ ஸ்வேதா மகாலட்சுமி நடிப்பில் அறிமுக இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படமான இது வியாழன் (செப்டம்பர் 25) அன்று திரையரங்குகளில் வெளியானது.
Right (தமிழ்)

நடிகர்கள் நட்டி நடராஜன் மற்றும் அருண் பாண்டியன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரைட். இத்திரைப்படம் இன்று (செப்டம்பர் 26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
குற்றம் தவிர் (தமிழ்)

அறிமுக இயக்குநர் கஜேந்திரன் இயக்கத்தில் ரிஷி ரித்விக் , யாத்ரா கிரிஷ்ணா,சரவணன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம், இன்று (செப்டம்பர் 26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Karam (மலையாளம்)

மலையாள இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், நோபுள் பாபு தாமஸ், இவன் உக்கோமனோவிக் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படமான இது , வியாழன் அன்று (செப்டம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Balti (மலையாளம்)

மலையாள நடிகர் ஷேன் நிகமின் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ளது பல்டி திரைப்படம். நடிகர்கள் சாந்தனு , ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் உடன் நடித்திருக்கும் இத்திரைப்படம் கபடி விளையாட்டின் பின்னணியில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இன்று ( செப்டம்பர் 26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் இசை அமைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
They Call Him OG (தெலுங்கு)
பிரபல தெலுங்கு நடிகரும் , ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நாயகனாக நடித்து , பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து, மும்பை கேங்கஸ்டர் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தெலுங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. தமன் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வியாழன் (செப்டம்பர் 25) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
One Battle After Another (ஆங்கிலம்)

பிரபல ஹாலிவுட் இயக்குநர் பால் தாமஸ் ஆன்டர்ஸன் இயக்கத்தில் லியனார்டோ டி காப்ரியோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இத்திரைப்படம் இன்று ( செப்டம்பர் 26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
All Of You - Apple Tv+

அறிவியல் பின்னணியில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படமான இதில் பிரெட் கோல்ட்ஸ்டெய்ன் , இமோகன் பூட்ஸ் , ஸ்டீவன் க்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று ( செப்டம்பர் 26) ஆப்பிள் டிவி தளத்தில் வெளியாகியுள்ளது.
Marvel Zombies - ஜியோ ஹாட் ஸ்டார்

வாட் இஃப் தொடரின் ஜாம்பி எப்பிசோடின் ஸ்பின் ஆஃப் தொடரான இது , மார்வெல் தயாரிப்பில் வெளிவரும் அதிக வன்முறைக் கொண்ட தொடர்களில் ஒன்று. 4 எப்பிசோடுக் கொண்ட இந்தத் தொடர் புதன்கிழமை (செப்டம்பர் 24) அன்று ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.
Janaawar - ZEE 5

புவன் அரோரா நடிப்பில் சச்சிந்திரா வட்ஸ் இயக்கத்தில் 8 எப்பிசோடுகளுடன் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் தொடர் ஜீ 5 தளத்தில் இன்று ( செப்டம்பர் 26) வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
Sundarakanda (Telugu) Jio Hotstar - செப்டம்பர் 23
Hridayapoorvam (Malayalam) Jio Hotstar -செப்டம்பர் 26
Oodum Kuthira Chadum Kuthira (Malayalam) Netflix - செப்டம்பர் 26
Odum Kuthira Chaadum Kuthira Review: ஏமாற்றம் ஃபா ஃபா சேட்டா; சோதிக்கும் ஃபகத் பாசிலின் காமெடி படம்!

Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ஓணம் ட்ரீட் எப்படி?
Sarkeet (Malayalam) manoramamax - செப்டம்பர் 26
Son Of Sardaar 2 (Hindi) Netflix - செப்டம்பர் 26
Dhadak 2 (Hindi) Netflix - செப்டம்பர் 26
Dangerous Animals (English) Lionsgate Play - செப்டம்பர் 26