செய்திகள் :

WTC Final: இந்தியாவுக்கு மிஞ்சியிருக்கும் கடுகளவு வாய்ப்பு; மகிழ்ச்சியில் ஆஸி.. நெருக்கடியில் இலங்கை

post image
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் எந்த அணி மோதப்போகிறது என்ற நிலையில்தான் புள்ளிப்பட்டியல் இருந்தது.

ஆனால், இன்று நிலை அப்படியே மாறியிருக்கிறது. முதல் முறையாக, முதல் அணியாக தென்னாப்பிரிக்க அணி WTC இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. மறுபக்கம், நியூசிலாந்துடன் 0 - 3 என டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்தது, நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் 1 - 2 எனப் பின்தங்கியிருப்பது ஆகிய காரணங்களால் இந்திய அணி இனியும் WTC இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியுமா என்ற கேள்வியெழுந்திருக்கிறது.

WTC Final - தென்னாப்பிரிக்கா

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா 66.67 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருப்பதால், பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் மீதமிருக்கும் ஒரு போட்டியில் தோற்றலுமே அந்த அணிக்குப் பிரச்னையில்லை. தென்னாப்பிரிக்காவுடன் யார் மோதப்போவது யார் என்ற இடத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் போட்டிபோடுகின்றன. புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 61.46 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்திலும், இந்தியா 52.780 சதவிகிதம் மூன்றாமிடத்திலும், இலங்கை 45.45 சதவிகிதத்துடன் ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன. புள்ளிப்பட்டியலில் 48.21 சதவிகிதத்துடன் நியூசிலாந்து நான்காம் இடத்தில் இருந்தாலும், டெஸ்ட் போட்டிகள் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

ஆஸ்திரேலியா:

இந்தியாவுடன் சிட்னியில் ஒரு டெஸ்ட், இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் என ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் இருக்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கையுடனான போட்டியில் தோல்வியடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 57 சதவிகிதத்துடன் (இந்தியா 50 சதவிகிதம், இலங்கை 53.85 சதவிகிதம்) இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்

இதுவே, சிட்னி போட்டி டிராவில் முடிந்து, இலங்கையுடன் இரண்டிலும் தோற்றால், ஆஸ்திரேலியா 53.51 சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு இறங்கும். இலங்கை 53.85 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்துக்கு உயர்ந்து இறுதிப்போட்டிக்குச் செல்லும். ஒருவேளை, சிட்னி டெஸ்டில் தோற்றாலும், இலங்கையுடன் இரண்டில் ஒன்று வெற்றிபெற்றாலே 57.02 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

இந்தியா:

இந்தியாவைப் பொறுத்தவரை இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியா - இலங்கை தொடரைப் பொறுத்தே இருக்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, இலங்கை தொடரில் ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 55.26 சதவிகிதத்துடன் சமநிலையில் இருக்கும்.

இந்தியா

அப்போது, அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற கணக்கில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மேலும், ஆஸ்திரேலியா சிட்னி டெஸ்டில் தோற்று, இலங்கைக்கெதிரான தொடரில் 0 - 1 அல்லது 0 - 2 என தொடரை இழந்தால், இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும். இது எதுவும் நடக்காமல், சிட்னி டெஸ்டில் இந்தியா டிரா செய்தால்கூட, திரும்பிப் பார்க்காமல் அடுத்த WTC தொடருக்குத் தயாராக வேண்டும்.

இலங்கை:

இலங்கை அணிக்கும் தற்போது ஒரே வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. அதற்கு முதலில், மேலே சொன்னதுபோல, சிட்னி டெஸ்டை ஆஸ்திரேலியா டிரா செய்ய வேண்டும். அதன்பிறகு, 2 - 0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இது நிகழ்ந்தால், ஆஸ்திரேலியா 53.51 சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு இறங்கும். இலங்கை 53.85 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்துக்கு உயர்ந்து இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

இலங்கை

எனவே, இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கே இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் எதுவும் நிகழலாம். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதப்போவது யார், சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

WTC Finals: தோல்வி எதிரொலி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்த இந்தியா

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 2-1 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன... மேலும் பார்க்க

Virat Kohli : `இது அரசனுக்கு அழகில்லை' - 8 முறையும் ஒரே பாணியில் அவுட்டான கோலி!

சிட்னி டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எட்டியிருக்கிறது. மீண்டும் விராட் கோலி சோபிக்கவில்லை. வெறும் 6 ரன்களில் இந்த இன்னி... மேலும் பார்க்க

Yuzvendra Chahal: விவாகரத்து பெறப்போகிறாரா?- மனைவியுடனான புகைப்படங்களை நீக்கிய சஹால்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலின் செயல் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.இந்திய கிரிக்கெட் ... மேலும் பார்க்க

Rishabh Pant : `நம்மள காப்பாத்த நாமதான் சண்ட செய்யணும்!' - ஆஸி வீரர்களை மிரள வைத்த பண்ட்

'Stupid...Stupid...Stupid...' மெல்பர்ன் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் தாறுமாறாக ஷாட் ஆடி அவுட் ஆன போது வர்ணனையில் இருந்த கவாஸ்கர் இப்படித்தான் கடுகடுத்திருந்தார். இன்றைக்கு அதே ரிஷப் பண்ட் அதே 'Stupid' வகை ஆ... மேலும் பார்க்க

Rohit Sharma : ``விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" - ரோஹித் சொன்ன விளக்கம்

பார்டர் கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பத... மேலும் பார்க்க

Bumrah: `திடீர் காயம்; மைதானத்திலிருந்து வெளியேறிய பும்ரா; கேப்டனாக கோலி'-சிட்னியில் என்ன நடக்கிறது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் சுருட்டியிருக்... மேலும் பார்க்க