செய்திகள் :

Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? - அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

post image

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் - சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் - சஹால் சூழல் கூட்டணியுடனே இந்திய அணி சென்றது. அந்த உலகக் கோப்பையில், ஜடேஜா அணியில் தேர்வுசெய்யப்பட்டிருந்த போதிலும், நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டி உட்பட இரண்டு போட்டிகளில் அவர் மட்டுமே விளையாடினார்.

குல்தீப், சாஹல்

தொடர் முழுவதும், குல்தீப் - சஹால் கூட்டணி விளையாடியது. ஆனால், 2019 உலகக் கோப்பைக்குப் பின்னர் அணியிலிருந்து இருவருமே ஓரங்கட்டப்பட்டனர். 2021 டி20 உலகக் கோப்பையில் இருவருமே இடம்பெறவில்லை. 2021-க்குப் பிறகு ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சஹால், 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து அந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதனால், 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றாலும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. குல்தீப்பும் அந்த உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும், குல்தீப் கம்பேக் கொடுத்து 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாடி முக்கிய பங்காற்றி, தற்போது அடுத்த மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

மறுபக்கம், 2023-ல் ஒன்பது சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தியதன் காரணமாகவும், 2023 ஐ.பி.எல் சீசனில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் காரணமாகவும் டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார் சஹால். ஆனால், இதிலும் ஒரு போட்டியில் கூட சஹால் களமிறக்கப்படவில்லை.

சஹால்

ஒருநாள் போட்டியைப் பொறுத்தளவில், கடைசியாக 2023 ஜனவரியில் இலங்கைக்கெதிராகவும், நியூசிலாந்துக்கெதிராகவும் தலா ஒரு போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹால், தற்போது சாம்பியன்ஸ் டிராபி அணிக்கும் கண்டுகொள்ளப்படவில்லை. ஐ.பி.எல்லில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகத் திகழும் சஹால், தனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

இத்தகைய சூழலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சஹாலின் கரியர் பி.சி.சி.ஐ-யால் முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார். தனது யூடியூப் சேனலில் இதுபற்றி சஹால் பற்றி பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, ``சஹால் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டார். அவரின் ஃபைல் மூடப்பட்டுவிட்டது. அவர்கள் (BCCI) ஏன் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதில், சுவாரஸ்யமானது என்னவென்றால், கடைசியாக அவர் 2023 ஜனவரியில் விளையாடினார். அவர் விளையாடி இரண்டு ஆண்டுகள் (சர்வதேச கிரிக்கெட்) ஆகிவிட்டது.

சஹால்

இருப்பினும், அவரின் விக்கெட்டுகள் எண்ணிக்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகிறார். அதேசமயம், அவரின் ஃபைல் மூடப்பட்டு இரண்டாண்டுகள் ஆகிவிட்டதால், திடீரென அணிக்குள் எடுத்தாலும் அது பின்னடைவாகத்தான் பார்க்கப்படும்." என்று கூறினார்.

மறுபக்கம், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. 2017-ல், இதேபோன்ற இந்தியா vs இங்கிலாந்து தொடரில்தான், பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பான ஆட்டத்தைப் பதிவுசெய்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலிலும் 80 ஆட்டங்களில் 96 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

சஹால்

அவரைத்தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் 60 போட்டிகளில் 95 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்று தொடங்கும், இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருக்கும் அர்ஷ்தீப் சிங் இன்னும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சஹாலை எளிதாகப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிடுவார்.

யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங்

அதுமட்டுமல்லாமல், இந்தத் தொடரில், குறைந்தபட்சம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டி20 வரலாற்றில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கக் கூடிய அரிய வாய்ப்பும் அர்ஷ்தீப் சிங் முன் இருக்கிறது.!

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Ranji Trophy : களமிறங்கும் ரோஹித், கோலி; களைகட்டும் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் - முழு விவரம்

நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது.ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்கள் ரஞ்சியில் களமிறங்க இருப்பதால், இந்தப் போட்டிகளின... மேலும் பார்க்க

`நான் நன்றாக விளையாடவில்லை; அதனால்தான்...'- இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர், அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறத... மேலும் பார்க்க

CT : பாகிஸ்தான் பெயரை இந்திய ஜெர்சியில் போட மறுக்கும் BCCI? - என்னதான் சொல்லப்போகிறது ICC?

இந்தியா vs பாகிஸ்தான்ஒரு ஐ.சி.சி தொடர் வருகிறதென்றால், அதில் இறுதிப்போட்டியை விடவும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், அத்தகைய சூழல் உருவாக்கப்படும் ஒரு போட்டி என்றால் அது இந்தியா vs பாகிஸ்தான் ஆட்ட... மேலும் பார்க்க

Gambhir: ``கம்பீர் நிச்சயம் அதைச் செய்வார்..." -இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும், சாம்பியன் அணி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு கூ... மேலும் பார்க்க

Mohammed Shami: `ஓய்வை அறிவித்தால்..' -கம்பேக் குறித்து முகமது ஷமி சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட இருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட உள்ள ஷமிக்... மேலும் பார்க்க

Sachin: ``என்னுடைய அம்மாவுக்காக என் கடைசிப் போட்டி மும்பையில் நடந்தது'' - உண்மையைப் பகிர்ந்த சச்சின்

உலக கிரிக்கெட் வரலாற்றை எப்போது எழுதினாலும் அதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார். மும்பையைச் சேர்ந்த இவர் சதங்களில் சதம், அதிக சர்வதேச ரன்கள், அதிக சர்வதேச போட... மேலும் பார்க்க