குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
Zomato: `காதலியை தேடிய பயனர்கள்!' - ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ கடந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடிய தேடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பயனர்கள் அதிகம் தேடப்பட்ட தகவல்களை வெளியிடும். அதேபோல ஸொமேட்டோ நிறுவனமும் 2024-ல் பயனர்கள் அதிகம் தேடிய தேடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. ஆர்டர்களைப் பொறுத்தவரை பெங்களூருவில் மே மாதம் 12-ஆம் தேதி அன்று மட்டும் 3 கோடி ஆர்டர்கள் பெறப்பட்டிருக்கின்றன.
பெங்களூரில், மும்பையை விட 30 லட்சம் கூடுதல் ஆர்டர்கள் பெறப்பட்டாலும் வருவாயைப் பொறுத்த வரையில் மும்பைதான் முதலிடத்தில் உள்ளது. பிற மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேஷம் மற்றும் ராஜஸ்தான் போன்றவைகளும் ஆர்டர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. தேடல்களைப் பொறுத்தவரை 2024-ஆம் ஆண்டில் 4940 பேர் ஸொமேட்டோவில் 'காதலி' என்று தேடி இருகின்றனர். தவிர 40 பயனர்கள் 'மணப்பெண்' என்று தேடி இருகின்றனர். உணவு டெலிவரி தளத்தில் இவ்வாறு தேடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...