சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
ஃபென்ஜால் புயலில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்!
ஃபென்ஜால் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் குறித்த பேரழிவு செய்தியை அறிந்தேன். இந்த துயரத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், உடைமைகளை இழந்தவர்கள் குறித்தே எனது எண்ணங்கள் இருக்கின்றன.
அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றுபதிவிட்டுள்ளார்.