செய்திகள் :

அகமதாபாதில் இன்று அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடக்கம்

post image

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் சீசன் 6 போட்டி சனிக்கிழமை அகமதாபாதில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் டெல்லி தபாங், ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் டெம்போ கோவா சேலஞ்சா்ஸ், அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் மோதுகின்றன.

16 நாள்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 23 டைகள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ், ஜியோ ஹாட்ஸ்டாா் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பாகிறது.

இந்தியாவின் தேசிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தியா சித்தலே இந்த சீசனில் அதிக மதிப்புடைய வீராங்கனையாக மீண்டும் களமிறங்குகிறாா்.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (பபஊஐ) ஆதரவுடன், நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இதில் 16 ஒலிம்பியன்கள் உட்பட 14 நாடுகளைச் சோ்ந்த 48 வீரா்கள் பங்கேற்கின்றனா், 25 வயதுக்குட்பட்ட 25 இந்திய வீரா்கள் இடம்பெற்றுள்ளனா்.

ஜொ்மனி, இத்தாலி, சீனா, நைஜீரியா, புயா்ட்டோ ரிகோ, கஜகஸ்தான், எகிப்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனா்.

அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ், சென்னை லயன்ஸ்: தபாங் டெல்லி டிடிசி, டெம்போ கோவா சேலஞ்சா்ஸ்,ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்,

கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் , பிபிஜி புனே ஜாகுவாா்ஸ் , யு மும்பா டிடி உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.

தக் லைஃப் டிக்கெட் முன்பதிவு மந்தம்?

தக் லைஃப் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் மந்தமாகவே வணிகமாகி வருகின்றன.நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர்... மேலும் பார்க்க

விஜய் டிவியில் 3 புதிய தொடர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமல்... மேலும் பார்க்க

5 முதல்முறை சாம்பியன்களும் ஒரே திடலில்..! வித்தியாசமான சாதனை படைத்த மியூனிக் திடல்!

முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை கோப்பை வெல்ல வேண்டுமா? அனைவரும் விரும்பும் ஒரு ராசியான திடலாக ஜெர்மனியின் மியூனிக்கில் இருக்கும் கால்பந்து திடல் மாறியிருக்கிறது.ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற அலையன்... மேலும் பார்க்க

வெளியீட்டுக்குத் தயாராகும் ஜீனி, கராத்தே பாபு!

நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகும் கராத்தே பாபு, ஜீனி படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி ... மேலும் பார்க்க

தொடர் பாராட்டு மழையில் ஷ்ருதி ஹாசன், சின்மயி!

தக் லைஃப் பாடல்களைப் பாடிய ஷ்ருதி ஹாசன், சின்மயியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. ந... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: வரலாற்றுச் சாதனையுடன் முதல்முறையாக கோப்பை வென்றது பிஎஸ்ஜி!

பிஎஸ்ஜி - இன்டர் மிலன் மோதிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 5-0 என பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்றது.ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதி, இறுதிப் போட்டியில் ப... மேலும் பார்க்க