கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல்கட்ட அறிக்கை தாக்கல்!
அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளில் மேலே பறக்க முடியாமல் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர்.
மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், விமான விபத்து நடைபெற்று ஒரு மாதமாகவுள்ள நிலையில், தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், விபத்து விமானிகளால் நேரிட்டதா? அல்லது விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் நிகழ்ந்ததா? என்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.