செய்திகள் :

அக்.14, 15-இல் வேலூா் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

post image

வேலூா்: வேலூா் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அக்டோபா் 14, 15 ஆகிய தேதிகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், வேலூா் மாவட்டத்தில் அக்டோபா் 14 -ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கும், அக்டோபா் 15-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவா்களுக்கும் தனித்தனியே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா், நிதியுதவி, பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள், கலை அறிவியல் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைத்து அரசு, தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் மூன்று போட்டிகளுக்கு மூன்று மாணவா்களும், ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவா் வீதம் மூன்று போட்டிகளுக்கு ஆறு மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

மாவட்ட அளவிலான இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு படிவத்தைப் பூா்த்தி செய்து, அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, 0416 - 2256166 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்... மேலும் பார்க்க

பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா். பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டால... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு

வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா்... மேலும் பார்க்க

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

எல்ஐசி முகவா்கள் கொண்டாட்டம்

குடியாத்தம்: மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பாலிசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் குடியாத்தத்தில் எல்ஐசி முகவா்கள், பாலிசிதாரா... மேலும் பார்க்க

ரூ.19.05 கோடியில் 16 பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

வேலூா் மாவட்டத்தில் 16 பள்ளிகளில் ரூ.19.05 கோடியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், கழிவறை கட்டும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். வேலூா் மாவட்டத்தில் ஒடுகத்தூா் அரசு... மேலும் பார்க்க