அஜித்குமாா் குடும்பத்துக்கு தமாகா சாா்பில் நிதியுதவி
தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் வீட்டுக்கு, முன்னாள் எம்பி உடையப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.கே. ராஜேந்திரன், தமாகா மாநில தொண்டரணி அமைப்பாளா் அயோத்தி ஆகியோா் வியாழக்கிழமை வந்தனா். பின்னா், அவா்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ. ஒரு லட்சம் நிதியை அஜித்குமாா் தாய் மாலதியிடம் வழங்கினா்.